நொடிக்கு நொடி பரபரப்பு.. ரஷ்யா நடத்தும் அணு ஆயுத போர் பயிற்சி.. எச்சரிக்கும் நேட்டோ
மாஸ்கோ: ரஷ்யா அதிபர் புதின் தலைமையில் அணு ஆயுத பயிற்சியை நடத்த ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா எல்லையில் லட்சக்கணக்கான போர் வீரர்கள் நிறுத்தப்பட்டிருப்பதால், போர் மூளும் சூழல் உருவாகும் என உலக நாடுகள் அச்சத்தில் இருக்கின்றன.
உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதால் இருநாடுகளுக்கு இடையே 2014 முதல் எல்லை பிரச்னை உள்ளது. தற்போது நாட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயற்சிக்கிறது.

படைகள்
இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளதால் ரஷ்யா கோபமடைந்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்தது ரஷ்யா. பதற்றம் அதிகரித்ததால், உக்ரைனும் படையைக் குவித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் இரு நாட்டுப்படைகளும் எல்லையில் குறைந்த அளவு படைகளைத் திரும்பப்பெற்றது. இந்நிலையில், மீண்டும் இரு நாட்டுப் படைகளும் எல்லையில்
வீரர்களைக் குவித்தது.

உக்ரைன்
இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா களம் இறங்கியது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இதனால் ஐரோப்பாவுக்கு பாதிப்பு என்று அமெரிக்கா தெரிவித்தது. இந்நிலையில் குறைந்த அளவிலான படைகளைத் திரும்பப் பெற்றது ரஷ்யா. ஒரு லட்சத்துக்கு அதிகமான படைகள் இன்னும் உக்ரைன் கிரிமியா பகுதியில் இருப்பதால், அமெரிக்கா ரஷ்யாவை எச்சரித்தது.

பயிற்சி
இந்நிலையில், ரஷ்யா தனது அணு ஆயுத பலத்தை காட்டும் வகையில் இன்று பிரமாண்ட போர் பயிற்சியில் ஈடுபட இருப்பதாக ரஷ்யா கூறி உள்ளது. இந்த பயிற்சியில் அணு ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிவிரைவு ஏவுகணைகள், நவீன போர் ஆயுதங்கள் ஈடுபடுத்தப்பட இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

புதின் தலைமை
இப்பயிற்சியை ரஷ்ய அதிபர் புதின் நேரில் பார்வையிட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர, கடந்த 2014ல் உக்ரைனிடமிருந்து கைப்பற்றிய கிரிமியன் பகுதியிலும், கருங்கடலிலும் ரஷ்ய போர் கப்பல்களும் பயிற்சி மேற்கொள்ள உள்ளன. போர் சூழலுக்கு மத்தியில் இதுபோன்ற அணு ஆயுத பயிற்சியை ரஷ்யா நடத்துவது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளன.

கண்டனம்
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசுகையில், "அமெரிக்கா மற்றும் நமது நட்பு நாடுகள் அனைத்தும் நேட்டோ-வின் நாடுகளை ஒவ்வோர் அங்குலமாக அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கத் தயாராக உள்ளன. நாங்கள் உக்ரைனில் சண்டையிட, படைகளை அனுப்ப மாட்டோம். ஆனால் உக்ரேனிய மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்" எனக் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications