கெமிக்கல் குண்டு.. இனிமேதான் ரிஸ்க்கே! ரஷ்யா பெரிய பிளான் போடுதாம்! வெள்ளை மாளிகை பரபர வார்னிங்
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா கெமிக்கல் அட்டாக் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடந்து வருகிறது. போரில் இதுவரை ரஷ்யாவால் பெரிய அளவில் முன்னேற்றங்களை நிகழ்த்த முடியவில்லை. கார்கிவ் நகரத்தில் கடுமையான தாக்குதல்களை நடத்தியும் கூட அந்த நகரத்தை ரஷ்யாவால் பிடிக்க முடியவில்லை.
அதேபோல் கீவ் நகரத்தையும் இதுவரை ரஷ்யாவால் பிடிக்க முடியவில்லை. தலைநகர் கீவிற்கு வெளியே ரஷ்ய படைகள் 60 கிமீ தூரத்திற்கு கடந்த 1 வாரமாக முடங்கி உள்ளது.

கெமிக்கல்
இந்த நிலையில்தான் உக்ரைன் மீது ரஷ்யா கெமிக்கல் அட்டாக் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் பெஸ்கி அளித்த பேட்டியில், நாம் ரஷ்யாவை கவனமாக பார்க்க வேண்டும். அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நாம் உக்ரைனில் பயோ ஆயுதம் தயாரிப்பதாக ரஷ்யா பொய் குற்றச்சாட்டு சொல்கிறது.

ரஷ்யா
ரஷ்யா நடத்த போகும் வரும்கால தாக்குதல்களுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் இப்படி ரஷ்யா செய்கிறது. இந்த போர் பெரிய அளவில் வெடிக்கும் அபாயம் உள்ளது. அதேபோல் ரஷ்யா பாரம்பரியமான ஆயுதங்களுக்கு பதிலாக வேறு ஆயுதங்களை பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அதாவது துப்பாக்கிகள், குண்டுகளுக்கு பதிலாக கெமிக்கல் வெப்பன்களை அந்த நாடு பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

சிறிய அளவிலான குண்டு
அதோடு சிறிய அளவிலான அணு ஆயுதங்களையும் அந்த நாடு பயன்படுத்தலாம். நாம் இங்கே கவலைப்படுவதற்கான பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிரியாவில் ரஷ்யாவின் கூட்டாளிகள் மூலம் கெமிக்கல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை மறக்க வேண்டாம். அங்கு கெமிக்கல் ஆயுதங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. இதற்காக நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆயுதம்
ரஷ்யா - உக்ரைன் போர் ஏற்பட்டுள்ள நிலையில் சமீபத்தில்தான் ரஷ்யா உக்ரைன் அருகே கடல் எல்லையில் மிஸைல் சோதனை நடத்தியது. ஹைப்பர் சோனிக், சூப்பர் சோனிக் மிசைல்களை வைத்து சோதனை செய்தது. ரஷ்யா சோதனை செய்த ஏவுகணைகள் எல்லாமே அணு ஆயுதத்தை தாங்கி சென்று தாக்கும் ஏவுகணைகள் ஆகும். இப்படிப்பட்ட நிலையில் தற்போது கெமிக்கல் ஆயுதங்கள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications