காம்ரேட்! வரலாற்றில் இதுவரை பார்க்காத பதிலடியை தருவேன்.. கர்ஜித்த புடின்.. அமெரிக்காவிற்கு வார்னிங்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: வரலாற்றில் நீங்கள் இதுவரை பார்க்காத பதிலடியை, எதிர்வினையை இனி பார்ப்பீர்கள் என்று அமெரிக்காவிற்கு ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    Russia Warning To America | Putin Speech Ukraine NATO | Oneindia Tamil

    ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் அதிகாரபூர்வமாக தொடங்கி உள்ளது. இத்தனை நாட்களாக உக்ரைன் - ரஷ்யா இடையே புகைச்சல் இருந்தது. உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகளை குவித்து வந்தது. உக்ரைன் நேட்டோவில் இணைவதை தடுக்கும் வகையில் புடின் போர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்கும்படி ரஷ்ய நாட்டு அதிபர் புடின் இன்று காலை உத்தரவிட்டார். இந்த போர் குறித்து ரஷ்ய அதிபர் புடின் வெளியிட்ட அறிவிப்பில் பல முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டார்.

    பேச்சு

    பேச்சு

    அவரின் 1 மணி நேரத்திற்கும் மேலான பேச்சின் சுருக்கமான அம்சங்கள், உக்ரைன் என்பது சோவியத் யூனியனில் ஒரு அங்கமாக இருந்த நாடு. அவர்களும் நம்முடைய காம்ரேட்கள்தான். அவர்களும் நமக்கு நெருக்கமாக உள்ளவர்கள்தான். உக்ரைன் மக்கள் இப்போதும் நம்முடைய உறவினர்கள்தான், ரத்த ரீதியாக, குடும்ப ரீதியாக இப்போதும் உக்ரைன் மக்கள் நம்முடைய மக்கள்தான்.

    உக்ரைன்

    உக்ரைன்

    ஆனால் உக்ரைன் அரசு அப்படி இல்லை. உக்ரைன் அரசு மேற்கு உலக நாடுகளின் அடிமையாகி இருக்கிறது. மாடர்ன் உக்ரைன் என்பது ரஷ்யா மூலம் உருவாக்கப்பட்டது . ரஷ்ய பேரரசுக்கு கீழேயும், சோவியத் யூனியன் அரசுக்கு கீழேயும்தான் உக்ரைன் வளர்ச்சி அடைந்தது. உக்ரைன் என்ற நாட்டை உருவாக்கியது நாம்தான். ஆனால் அதே உக்ரைன் இப்போது நம்மை மிரட்டி வருகிறது.

    போர் எப்படி?

    போர் எப்படி?

    மேற்கு உலக நாடுகளுடன் நெருக்கம் காட்டுவதாக கூறி உக்ரைன் நம்மை மிரட்ட வருகிறது. உக்ரைன் அரசு இந்த போக்கை நிறுத்த வேண்டும். ஆனால் நிறுத்தவில்லை. நோய் பரப்பும் கிருமிகள் போல உக்ரைன் நம்மை அச்சறுத்தி வருகிறது. உக்ரைன் மக்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அங்கே இருக்கும் அரசு மேற்கு உலக நாடுகளுக்கு அடிமையாக இருக்கிறது. ரஷ்யாவை தொடர்ந்து உக்ரைன் மறைமுகமாக மிரட்டி வருகிறது.
    உக்ரைனில் நீதி இல்லை, அங்கு பொருளாதாரம் மோசமாகிவிட்டது, சரியான கல்வி இல்லை, மருத்துவம் இல்லை.

    அணு ஆயுதம்

    அணு ஆயுதம்

    நம்முடைய சொந்தங்கள் உக்ரைனில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். உக்ரைன் இப்போது அணு ஆயுதம் தயாரிக்க முயன்று வருகிறது. மேற்கு உலக நாடுகளின் உதவியுடன் உக்ரைன் அணு ஆயுதங்களை தயாரிக்க முயன்று வருகிறது. ரஷ்யாவிற்கு உள்ளே தாக்குதல் நடத்தும் அளவிற்கு அதிக தூரம் தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் உருவாக்கி வருகிறது. அவர்களுக்கு மேற்கு உலக நாடுகள் ஆதரவாக உள்ளது.

    மேற்கு உலக நாடுகள்

    மேற்கு உலக நாடுகள்

    தங்கள் தொழில்நுட்பங்களை மேற்கு உலக நாடுகள் உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. ஆனால் இது ரஷ்யாவிற்கான ஆபத்தை ஏற்படுத்தும். இப்போது இல்லை என்றாலும் எதிர்காலத்தில் ரஷ்யாவிற்கு இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படும். இது ரியல் டேன்ஜர். நாம் இதற்கு எதிர்காலத்தில் பதில் அளிப்பதை விட இப்போதே பதில் அளிக்க வேண்டும். உக்ரைனுக்கு அணு ஆயுதம் கொடுப்பதற்காக அமெரிக்கா பல பில்லியன் டாலர்களை செலவு செய்து வருகிறது. உலக நாடுகள் இதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

    அணு ஆயுதம்

    அணு ஆயுதம்

    உக்ரைன் இன்னொரு பக்கம் நேட்டோவில் இணைய முயன்று வருகிறது. இது ரஷ்யாவிற்கு நேரடி ஆபத்தை கொடுக்கும். இப்போது உக்ரைன் நாங்கள் நேட்டோவில் இணையவில்லை என்று கூறலாம். ஆனால் நாளை இவர்கள் இணைய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். எதிர்காலத்தில் இவர்கள் நமக்கு எதிராக திரும்ப மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். அமெரிக்காவின் ரஷ்யாவிற்கு எதிரான பாலிசிக்கு எதிரான திட்டம் இது.

    நேட்டோ

    நேட்டோ

    எப்போது உக்ரைன் நேட்டோவில் இணைந்தாலும் அது ரஷ்யாவிற்குதான் ஆபத்து. ரஷ்யா போன்ற பெரிய நாடு, சுதந்திரமாக இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இதுதான் அனைத்து கேள்விகளுக்கும் உள்ள பதில். அமெரிக்கா ரஷ்யாவை விரும்பவில்லை. இதனால் உக்ரைனை நமக்கு எதிராக திருப்பி உள்ளனர். நேட்டோ தொடர்ந்து ரஷ்ய எல்லையில் உள்ள நாடுகளை கட்டுப்படுத்தி வருகிறது. பல்கிரியா, லத்திவியா, லிதியானியா, சொல்வேகியா, ரோமானியா போன்ற நாடுகளையும் குரோஷியா, அல்பேனியா போன்ற நாடுகளையும் கூட அமெரிக்கா நேட்டோவில் இணைத்துவிட்டது.

     ரத்தம் பதிலடி

    ரத்தம் பதிலடி

    உக்ரைன் அரசை கட்டுப்படுத்தி வரும் கைவிட வேண்டும். இல்லையென்றால் எங்கள் எதிர்வினைகள் மிக மோசமாக் இருக்கும். உக்ரைனில் சிந்தப்படும் ரத்தங்களுக்கு அந்த நாட்டின் அரசுதான் காரணம். உக்ரைனில் இருக்கும் அந்நிய நாட்டு ராணுவங்களை, கட்டுப்பாடுகளை வெளியேற்றுவோம். எங்களை எதிர்க்கும், எங்களுக்கு இடையூறு செய்யும், எங்களுக்கு மிரட்டல் விடுங்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ரஷ்யா கடுமையான பதிலடி கொடுக்கும். வரலாற்றில் நீங்கள் இதுவரை பார்க்காத பதிலடியை, எதிர்வினையை இனி பார்ப்பீர்கள் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+