For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உக்ரைன் பிரதமர் ராஜினாமா: மலேசிய விமானம் தொடர்பான விசாரணையில் சிக்கல்!

By Mathi
Google Oneindia Tamil News

டோனெட்ஸ்க்: உக்ரைன் ஆளும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அந்நாட்டின் பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக் தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Ukraine's PM Resigns, Complicating MH17 Probe

உக்ரைன் முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச், பதவி விலகிய பின்பு அமைந்த கூட்டணி ஆட்சியில் ஸ்வபோதா கட்சியும் முன்னாள் குத்துச் சண்டை வீரர் விதாலி கிளிட்ச்கோ தலைமையிலான உதர் கட்சியும் இடம் பெற்றிருந்தன. இந்த இரண்டு கட்சிகளும் திடீரென அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றன.

இதனைத் தொடர்ந்து தாம் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக நாடாளுமன்றத்தில் ஆர்செனி யாட்சென்யுக் அறிவித்தார். இதனால் உக்ரைன் உள்நாட்டு அரசியலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் கடந்த வாரம் கிழக்கு உக்ரைனில் ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்களால் மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான விசாரணைக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

English summary
Ukraine's prime minister resigned Thursday after his governing coalition collapsed, plunging the former Soviet state into political limbo as it struggles to quell a deadly rebellion in the east.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X