மலேசிய விமானத்தை சுட்டுத் தள்ளியது ரஷ்யா தான், ஆதாரம் இருக்கு: சொல்கிறது உக்ரைன் அரசு
கீவ்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17-ஐ ஏவுகணை வீசித் தாக்கியது ரஷ்யா தான் என்பதை நிரூபிக்க தயார் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
நெதர்லாந்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டதில் 298 பேர் பலியாகினர்.
ரஷ்ய விமானம் என்று நினைத்து உக்ரைன் தாக்கியதாகவும், உக்ரைன் விமானம் என்று நினைத்து ரஷ்ய ராணுவ ஆதரவுப்படை தீவிரவாதிகள் தாக்கியதாக உக்ரைனும் தெரிவித்து வருகிறது.

உக்ரைன்
மலேசிய விமானத்தை ரஷ்யா தான் ஏவுகணை வீசித் தாக்கியது என்பதை தங்களால் நிரூபிக்க முடியும் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

ஆதாரங்கள்
விமானம் விழுந்த இடத்திற்கு மீட்பு குழுவினரை வரவிடாமல் தடுத்து, ஏவுகணையை விண்ணில் செலுத்த பயன்படுத்தப்பட்ட கருவியை ரஷ்யாவுக்கு தீவிரவாதிகள் எடுத்துச் சென்றுவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

பக்
ரஷ்ய எல்லையில் உள்ள சாலைகளில் பக் ஏவுகணை சிஸ்டம்கள் 3 இருந்த புகைப்படங்களை உக்ரைன் பாதுகாப்பு துறை அதிகாரி விடலி நைடா வெளியிட்டுள்ளார்.

ஆதாரம்
இந்த தீவிரவாத தாக்குதலை ரஷ்ய ஃபெடரேஷன் திட்டமிட்டு நடத்தியதற்கான ஆதராங்கள் எங்களிடம் உள்ளது. தீவிரவாத நடவடிக்கையையும், அதில் தங்களின் நேரடி ஈடுபாட்டையும் மறைக்க ரஷ்யா முயற்சிக்கிறது என்று எங்களுக்கு தெரியும் என்று நைடா தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications