மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை நடத்திய உக்ரைன்.. அதிர்ந்த ரஷ்யா! திரும்பிய பக்கமெல்லாம் அடி மேல் அடி

Subscribe to Oneindia Tamil

கீவ்: ரஷ்யா மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து கிரிமியா செல்லும் பாலத்தை வெடி மருந்துகள் மூலமாக தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. பாலத்தின் சில பகுதிகள் சேதமடைந்ததால், ரஷ்ய படைகளுக்குத் தேவையான தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இது ரஷ்யாவுக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவுக்குள் மேலும் ஒரு பெரிய அளவிலான அட்டாக்கை நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து கிரிமியா செல்லும் பாலத்தை வெடிமருந்துகள் மூலம் தாக்கியதாக செய்தி வெளியாகியுள்ளது. இப்பாலம் ரஷ்யாவின் தளவாட போக்குவரத்திற்கு ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

ukraine-says-its-targets-key-bridge-in-russia-to-crimea-with-explosive-attack

தண்ணீருக்கடியில் செல்லும் ரோபோக்கள்

உக்ரைன் பாதுகாப்பு சேவை இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. பாலத்தின் சில பகுதிகள் சேதமடைந்ததால், ரஷ்ய படைகளுக்குத் தேவையான தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இது ரஷ்யாவிற்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கும் என நம்பப்படுகிறது.

ரஷ்யாவுடனான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உக்ரைனின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. உக்ரைன் தனது தாக்குதல் உத்திகளை வலுப்படுத்தி, ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு வருகிறது. இதன் மூலம் ரஷ்யாவின் தளவாட நகர்வுகளை முடக்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது.

ரஷ்யா பதிலடி கொடுக்கும்?

உக்ரைன் பாதுகாப்பு வட்டாரங்களின் தகவல்படி, தண்ணீருக்கடியில் செல்லும் ரோபோக்கள் மூலமாக வெடிபொருட்கள் பாலத்தின் தூண்களில் பொருத்தப்பட்டன. பின்னர், அவை வெடிக்க வைக்கப்பட்டன. இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை.

எனினும், ரஷ்ய ஊடகங்கள் பாலத்தின் பாதிப்பை ஒப்புக் கொண்டுள்ளன. உக்ரைன் நடத்திய இந்த தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடும். இந்த பாலம், ரஷ்யாவில் இருந்து கிரிமியா தீபகற்பத்தை இணைக்கும் முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக இருந்து வருகிறது. உக்ரைன் இந்த பாலத்தைத் தாக்கியதன் மூலம், ரஷ்யாவின் இராணுவ தளவாட விநியோகத்தில் இடையூறு ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் மோதலில் இதுவரை நடந்தது

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், பெரிய அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன.

உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாட்டு தலைவர்களிடமும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். இதையடுத்து ரஷ்யா-உக்ரைன் இடையே முதல் முறையாக நேரடி பேச்சு வார்த்தை கடந்த மாதம் துருக்கியில் நடந்தது. இதில் இரு தரப்பும் தலா ஆயிரம் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டன. இதன்படி கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.

இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை

இதற்கிடயே இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில், நேற்று முன்தினம் ரஷ்யா மீது மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியது. கண்டெய்னர் லாரிகளில் மரப்பெட்டிகளில் டிரோன்களை ரஷ்யாவுக்குள் ரகசியமாக எடுத்து சென்று ரஷ்ய விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதில், 40 க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் சேதம் அடைந்தன. ரஷ்யாவுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

போர் தீவிரமடையும் அபாயம்

ரஷ்யா நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியது.
கடுமையான சண்டைக்கு மத்தியியிம் ரஷ்யா-உக்ரைன் இடையே 2-ம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று துருக்கியில் நடந்தது. இதில், 3 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றனர். போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ரஷியா, விதிமுறைகளை கொண்ட ஆவணத்தை கொடுத்து உள்ளது.

இந்த ஆவணத்தை மதிப்பாய்வு செய்து பதில் அளிப்பது குறித்து முடிவு செய்ய ஒரு வாரம் தேவைப்படும் என்று உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால் இரு தரப்புக்கும் இடையேயான தாக்குதல் தீவிரமடையும் அபாயம் அதிகரித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+