உக்ரைன் போர்.. "எந்த எல்லைக்கும்" செல்ல தயாராக அதிபர் புதின்.. என்ன காரணம் தெரியுமா.. முழு பின்னணி

Subscribe to Oneindia Tamil

கீவ்: உக்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் போர் 4ஆவது வாரமாகத் தொடரும் நிலையில், இந்த போர் புதினை எந்த எல்லைக்கும் தள்ள வாய்ப்புள்ளதாக உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

உக்ரைனில் போர் 4ஆவது வாரமாகத் தொடரும் நிலையில், அங்கு நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறி வருகிறது. தற்போது வரை உக்ரைன் போர் என்பது அந்நாட்டின் ஆதரவாளர்களுக்கு நினைத்ததை விடச் சிறப்பாகவே இருந்து வருகிறது.

ஆனால், ரஷ்யாவுக்கு இந்தப் போரில் இப்போது வரை சொல்லிக் கொள்ளும் வகையில் வெற்றி என எதுவும் கிடைக்கவில்லை. பல பகுதிகளில் ரஷ்ய ராணுவத்தை உக்ரைன் வீரர்கள் முன்னேற விடாமல் முடக்கி உள்ளனர்.

 உக்ரைன் போர்

உக்ரைன் போர்

சீனா, சிரியா உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாகவே எடுத்துள்ளன. அமெரிக்காவைப் பொருத்தவரை அதிபர் ஜோ பைடன் இரண்டு முரண்பட்ட நோக்கங்களை ஒரே நேரத்தில் செய்ய முயல்கிறார். அதாவது ரஷ்யா உடன் அமெரிக்க ராணுவம் நேரடியாக மோதக் கூடாது. அதேநேரம் போரை ஆரம்பித்த ரஷ்யாவுக்குப் பாடம் புகட்டும் வகையில் உக்ரைன் நாட்டிற்கு மிகப் பெரிய அளவில் உதவிகளையும் பைடன் செய்து வருகிறார். ஆனால், இது புதினின் பிடிவாதத்தை மேலும் மேலும் அதிகமாக்கும் வகையிலேயே உள்ளது. இது ஒரு கட்டத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீதும் கூட புதின் நேரடியாக மோத வழிவகை செய்யும் எனச் சிலர் எச்சரிக்கின்றனர்.

 ரஷ்ய ராணுவம்

ரஷ்ய ராணுவம்

உக்ரைன் போர் ஆரம்பிக்கும்போது, புதின் உள்ளிட்ட பெரும்பாலான சர்வதேச வல்லுநர்கள், ரஷ்யப் படைகள் உக்ரைன் ராணுவத்தின் எதிர்ப்பை விரைவில் முறியடிக்கும் என்று எதிர்பார்த்தனர். இருப்பினும், ரஷ்யாவின் திறமையின்மை மற்றும் உக்ரைன் ராணுவத்தின் ஊக்கம் புதினின் திட்டத்தை தவிடுபொடியாக்கியது. போர் தொடங்கிய சமயத்தில் ரஷ்ய ராணுவத்தால் உக்ரைன் கிழக்கில் பல பகுதிகளை எளிதாகக் கைப்பற்ற முடிந்தது. இப்போதும் கூட தலைநகர் கீவ், துறைமுக நகரமான மரியுபோல் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷ்யக் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இப்போதும் கூட ரஷ்ய ராணுவத்தின் சக்தியை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது எனச் சர்வதேச பார்வையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

 உக்ரைன் பதிலடி

உக்ரைன் பதிலடி

ஆனால் மேற்குலக நாடுகளின் பணமும் ஆயுதங்களும் உக்ரைன் நாட்டிற்குப் பெரிய உத்வேகத்தை அளிக்கிறது. ரஷ்யா படைகள் எதிர்பாராத இடங்களில் இருந்து தாக்குவது, அவர்களின் விநியோக சங்கிலியை தாக்குவது போன்ற நடவடிக்கைகளில் உக்ரைன் தீவிரம் காட்டுகிறது. இதனால், ரஷ்ய ராணுவத்தின் இழப்புகள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் போர் முடிவுக்கு வரும் முன்னரே ரஷ்ய ராணுவம் கடும் இழப்புகளைச் சந்திக்கும். இது சர்வதேச அளவில் முக்கியமான முடிவாக இருக்கும். இது அமெரிக்க உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கக்கூடியது.

 அமெரிக்கா நிலைப்பாடு

அமெரிக்கா நிலைப்பாடு

பைடனை பொருத்தவரை இந்த விவகாரத்தில் அவரது நிலைப்பாடு மிகவும் தெளிவாகவே இருந்தது. ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வரும் பைடன், உக்ரைன் ராணுவத்திற்கும் ராணுவ உதவிகளை அளித்து வருகிறார். அதேநேரம் இந்த போரில் அமெரிக்க ராணுவம் நேரடியாக ஈடுபடாது என்பதையும் அவர் தொடர்ச்சியாகத் தெளிவுபடுத்தி வருகிறார். நேட்டோ அமைப்பின் ஒவ்வொரு அங்குலத்தையும் அமெரிக்கா காக்கும் என்று உறுதி அளித்துள்ள பைடன், ஆனால், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடாது என்றும் அது 3ஆம் உலகப் போருக்கு வித்திட்டும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

 புதினுக்கு முக்கியம்

புதினுக்கு முக்கியம்

மற்ற அனைவரையும் விட புதினுக்கு தான் இந்தப் போர் மிக மிக முக்கியமான ஒன்று. புதின் அரசியல் வாழ்க்கையில் இது வாழ்வா சாவா போர் என்று கூடச் சொல்லலாம். எனவே உக்ரைன் போரில் வெல்ல அவர் எந்த எல்லைக்கும் கூட செல்லலாம். ரஷ்ய வரையறுக்கப்பட்ட அணு ஆயுத தாக்குதலில் ஈடுபடவும் வாய்ப்புள்ளதாகச் சிலர் எச்சரித்துள்ளனர். அல்லது குறைந்தபட்சம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஆபத்துகளும் உள்ளன. மாரியுபோல் மற்றும் கார்கிவ் நகரங்களில் கெமிக்கல் தாக்குதல் நடத்துவது குறித்து ரஷ்யா தீவிர பரிசீலனையிலே உள்ளது.

 அனைத்தையும் செய்வார்

அனைத்தையும் செய்வார்

மேலும்,உக்ரைன் அருகே இருக்கும் நேட்டோ படைகள் மீதும் கூட ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தலாம். அல்லது உக்ரைன் அருகே இருக்கும் நேட்டோ நாடுகளை எச்சரிக்கும் நடவடிக்கைகளிலும் கூட அவர் ஈடுபடலாம். இவை அனைத்தும் போரில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற நினைப்பில் இருக்கும் சர்வாதிகாரியின் மனநிலையையே காட்டுவதாக அமெரிக்கத் தேசிய புலனாய்வு இயக்குநர் அவ்ரில் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் போரில் புதினால் இழக்க முடியாது. அப்படி இழந்தால் அது புதினின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கிவிடும் என்பதால் தோல்வியைத் தவிர்க்க அவர் தன்னால் ஆன அனைத்தையும் செய்வார்.

 மிக முக்கியம்

மிக முக்கியம்

எனவே, வரும் காலத்தில் பைடன் முடிவு என்னவாக இருக்கும் என்பது மிக முக்கியமானதாக மாறியுள்ளது. தோல்வியைத் தவிர்க்க ரஷ்யா மோசமான காரியங்களில் ஈடுபடு துணியும் போதும், போரில் இருந்து விலகி இருப்பதையே பைடன் விரும்புவரா எனத் தெரியவில்லை. அதேபோல உக்ரைன் போரில் அமெரிக்கா நிச்சயம் நேரடியாக தலையிடாது என்று உறுதியாகக் கூறுவதை பைடன் தவிர்க்க வேண்டும் என்றும் இது புதினுக்கு பூஸ்ட் கொடுக்கும் வகையில் இருப்பதாகவும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+