இவ்வளவு நடந்த பிறகும்.. ரஷ்யாவுக்கு உதவ தயங்கும் சீனா! தனித்துவிடப்பட்ட புதின்? ஓ இது தான் காரணமா
கீவ்: உக்ரைன் போரால் ரஷ்யாவுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், ரஷ்யாவுக்குச் சீனா வெளிப்படையாக எந்தவொரு உதவியும் செய்யாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
Recommended Video

உக்ரைன் நாட்டில் கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய போர், 4ஆவது வாரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போர் தொடர்பாக இதுவரை இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
உக்ரைன் போருக்கு உலகின் பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது. பெரும்பாலான உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டையே எடுத்துள்ளன.

சீனா
இருப்பினும், சிரியா போன்ற சில நாடுகள் இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. போர் தொடங்கும் முன்பு, சர்வதேச வல்லுநர்கள் பலரும் இந்த விவகாரத்தில் சீனா வெளிப்படையாக ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். இப்போது போர் 4ஆவது வாரமாகத் தொடரும் நிலையில், இந்த விவகாரத்தில் சீனாவின் பங்கு முக்கியமானதாக மாறி வருகிறது. இருப்பினும், இதுவரை சீனா வெளிப்படையாக ரஷ்யாவுக்கு ஆதரவான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

சீன தூதர்
வாஷிங்டன் போஸ்ட்டில் அமெரிக்காவுக்கான சீன தூதர் கின் கேங் தனது கட்டுரையில், "சீனாவுக்கு இந்தப் போரினால் எந்தப் பயனும் இல்லை. சீனாவின் ஆதரவை வேண்டும் என்ற நினைத்துக் கொண்டே சீன நிறுவனங்களின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது எப்படி வேலை செய்யும் என எனக்குப் புரியவில்லை. இந்தப் போர் தொடர்பாகச் சீனாவுக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது. எங்களுக்கு இந்த போரில் இருந்து எந்த ஆதாயமும் கிடைக்கப் போவது இல்லை. அமைதியான முறையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தவே நாங்கள் விரும்புகிறோம். உக்ரைனில் ரஷ்யா போரைத் தொடங்கியதில் இருந்து, சீனா நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

என்ன காரணம்
சீனாவுக்கு எந்தவொரு சர்வதேச நெருக்கடியையும் எதிர்கொள்ள விரும்பவில்லை என்றும் அதேபோல சீன வளர்ச்சியைப் பாதிக்கும் பொருளாதாரத் தடைகளையும் நாங்கள் விரும்பவில்லை என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்தார். சீனாவின் இந்த நடுநிலை முடிவு என்பது எந்தளவுக்கு ஆபத்தற்ற நிலைப்பாட்டை எடுக்கச் சீனா விரும்புகிறது என்பதைப் பிரதிபலிப்பதாக உள்ளது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு எதிரான நிலைப்பட்டை ரஷ்யாவும் சீனாவும் நெருங்கின. இரு நாடுகளும் உறவில் வரம்புகள் இல்லை என்று கூட்டாக அறிவிக்கை விடும் அளவுக்கு இரு நாட்டு உறவு இருந்தன.

சீனாவின் நிலைப்பாடு
உக்ரைன் போருக்குப் பின், ரஷ்யாவின் செயல்பாடுகளைச் சீனா கண்டிக்கவில்லை. அதேபோல இந்த போர் என்றும் கூட சீனா குறிப்பிட மறுத்துவிட்டது. குறிப்பாக, உக்ரைன் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வர ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, அதில் சீனா வாக்களிக்கவில்லை. அதேபோல இந்த விவகாரத்தில் உலக நாடுகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதைப் பொறுத்து தைவான் விவகாரத்தில் சீனா தனது நெருக்கடியை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. இருப்பினும், உக்ரைன் போருக்குப் பின் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், உக்ரைனில் ரஷ்யா ராணுவத்தின் திணறல் உள்ளிட்டவை சீனாவின் தயக்கத்தை அதிகப்படுத்தி இருக்கும்.

பொருளாதார வளர்ச்சி
அதேநேரம் ஐரோப்பிய நாடுகளைப் பகைத்துக் கொள்ளும் வகையிலும் சீனா எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. உக்ரைன் உள்ளிட்ட பல முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் உடன் சீனா தொடர்ச்சியாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. எனவே, அவர்களையும் பகைத்துக் கொள்ளச் சீனா விரும்பவில்லை. அப்படி எதாவது நடந்து, சீனா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தால் அது அந்நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும். எனவே, சீனாவால் இந்த போரில் ரஷ்யாவை வெளிப்படையாக ஆதரிக்கவும் முடியாது, எதிர்க்கவும் முடியாது.

தயக்கம்
இந்தப் போரில் சீனாவை மத்தியஸ்தராகப் பயன்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்பவில்லை. ரஷ்யாவுக்குச் சீனா பொருளாதார ரீதியில் உதவுவது மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளில் இருந்து சீனா தப்ப உதவும் என்பதால் இந்த விவகாரத்தில் மேற்குல நாடுகள் ரஷ்யாவை எதிர்க்க வேண்டும் என்றே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விரும்புகின்றன. ஏற்கனவே பெருந்தொற்றால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள நிலையில், சர்வதேச நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளச் சீனா விரும்பவில்லை என்பதை.சீனாவின் இந்த தயக்கம் காட்டுகிறது.












Click it and Unblock the Notifications