ரஷ்யாவை வீழ்த்துவோம்.. வெற்றி எங்களுக்கே.. உக்ரைன் வெளியுறவு அமைச்சர் அதிரடி
கிவ்: ‛‛அமைதியான உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு வீசுகிறது. ரஷ்யாவின் போரில் உக்ரைன் வெற்றி பெறும். உக்ரைனுக்கு பிற நாடுகள் உதவி செய்ய வேண்டும்'' என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டிம்ட்ரோ குலேபா கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வந்த நிலையில் போரை துவங்கியுள்ளது. ரஷ்ய அதிபர் விலாதிமர் புடின் உத்தரவில் அந்நாட்டு படைகள் உக்ரைன் மீது குண்டுவீசி தாக்குதலை ஆரம்பித்துள்ளன.
இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை துவங்கி உள்ளன. மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் பதிவு
இந்நிலையில் தான் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிம்ட்ரோ குலேபா ரஷ்யாவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஷ்யா மீது அனைத்து நாடுகளும் பொருளாதார தடைகள் விதித்து பாடம் கற்பிக்க வேண்டும். உக்ரைனுக்கு பிற நாடுகள் உதவி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒன்றிணைய வேண்டும்
அந்த பதிவில் ‛‛ரஷ்யா அதிபர் புடின் போர் நடவடிக்கையை முழுமையாக துவங்கி உள்ளார். அமைதியான உக்ரைன் நாட்டு நகரங்கள் தாக்குதலுக்கு உட்பட்டு வருகிறது. இது ஆக்கிரமிப்புக்கான போர். உக்ரைன் தன்னை தற்காத்து கொள்வதோடு, நிச்சயம் வெற்றி பெறும். ரஷ்ய அதிபர் புடினின் நடவடிக்கையை உலக நாடுகள் தடுக்க வேண்டும். இது ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம்'' என குறிப்பிட்டுள்ளார்.

உதவிகள் வேண்டும்
மேலும் ரஷ்யாவை கட்டுப்படுத்த பிற நாடுகள் தற்போது செய்ய வேண்டிய 5 விஷயங்கள் என்ன என்பது குறித்து டிம்ட்ரோ குலேபா குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான பதிவில், முதலாவதாக ரஷ்யாவுக்கு பேரழிவு தரும் வகையில் பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் எனவும், 2வதாக ரஷ்யாவை அனைத்து விஷயங்களிலும் தனிமைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் 3வது, 4வதாக உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்ய வேண்டும். 5வதாக மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சமடையும் மக்கள்
மேலும் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைன் நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். உயிர் பிழைக்கும் நடவடிக்கையாக அவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தஞ்சமடைகின்றனர். மேலும் உக்ரைன் நாட்டில் உள்ள பிற நாட்டு மக்களை அந்தந்த நாடுகள் மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைக்கு நேட்டோ அமைப்பு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் படைகள் பதிலடி கொடுக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடக்கும் பட்சத்தில் இது 3வது உலக போராக மாறலாம் என அஞ்சப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications