‘ஆப்பிள்’ ஆசை... தனது பெயரை ‘ஐ போன் 7’ என மாற்றிக் கொண்ட இளைஞர்..!
உக்ரைன் நாட்டில் எலக்ட்ரானிக் விற்பனையகம் ஒன்று நடத்திய போட்டியில் வெல்வதற்காக தனது பெயரை, ‘ஐ போன் 7’ என அதிகாரப்பூர்வமாக மாற்றி இருக்கிறார் இளைஞர் ஒருவர்.
கீவ்: போட்டி ஒன்றில் வெல்வதற்காக தனது சொந்தப் பெயரையே 'ஐ போன் 7' என மாற்றி இருக்கிறார் உக்ரைன் இளைஞர் ஒருவர்.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐ போன் 7-ஐ சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்தப் போனை விளம்பரப் படுத்துவதற்காக அந்த நிறுவனம் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக எலக்ட்ரானிக் விற்பனையகம் ஒன்று, தனது பெயரை 'ஐ போன் 7' என அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொள்ளும் முதல் ஐந்து பேருக்கு, ஐ போன் 7 போனை பரிசாக அளிப்பதாக அறிவித்தது.
இந்த சவாலை ஏற்றுக் கொண்ட 20 வயதான உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது பெயரை அதிகாரப்பூர்வமாக 'ஐ போன் செவன்' என மாற்றிக் கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்த விற்பனையகம் புது ஐ போன் 7 ஒன்றை அந்த இளைஞருக்கு பரிசாக அளித்துள்ளது.
ஐ போன் 7 -ன் விற்பனை விலை 850 அமெரிக்க டாலர்கள் ஆகும். ஆனால், அந்த இளைஞருக்கு தனது பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்ற வெறும் 2 அமெரிக்க டாலர்கள் மட்டுமே செலவானதாம்.
அதோடு, தனது பெயரை தற்காலிகமாக மட்டுமே மாற்றியுள்ளதாக கூறியுள்ள அந்த இளைஞர், தனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்தவுடன், மீண்டும் பழைய பேருக்கு மாறி விடுவேன் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications