பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்க ஐ.நா வாக்கெடுப்பு! இந்தியா ஆதரவு.. எதிர்த்து வாக்களித்த அமெரிக்கா
நியூயார்க்: இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையிலான நீண்டகால மோதலுக்கு தீர்வு காண முயலும் "நியூயார்க் பிரகடனத்தை" ஆதரித்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐ.நாவில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கக் கோரும் நியூயார்க் பிரகடனத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
நியூயார்க் பிரகடனத்திற்கு ஆதரவாக 142 நாடுகளும், எதிராக 10 நாடுகளும் வாக்களித்த நிலையில், தீர்மானம் நிறைவேறியது. அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி, அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகள் இந்த பிரகடனத்துக்கு எதிராக வாக்களித்தன.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 2023 முதல் போர் நடைபெற்று வருகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்திய போரில் இதுவரை சுமார் 64,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே போர் நிறுத்தம் குறித்து சர்வதேச அளவில் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.
நியூயார்க் பிரகடனம்
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஐ.நாவின் உயர்நிலை கூட்டம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. இந்தக் கூட்டத்தை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் புறக்கணித்தன. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, பாலஸ்தீன பிரச்சனைக்கு அமைதியான தீர்வு மற்றும் இரு - தனி தனி நாடுகளே தீர்வு என்ற தலைப்பில் 'நியூயார்க் பிரகடனம்' என்ற 25 பக்க ஆவணம் வெளியிடப்பட்டது.
அந்தப் பிரகடனத்தில், பாலஸ்தீனத்தின் காசாவில் போரை நிறுத்த வேண்டும், காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும், காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்து அதன் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. காசாவில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களையும் இது கண்டிக்கிறது.
ஐ.நா பொதுச்சபை வாக்கெடுப்பு
இந்நிலையில், நியூயார்க் பிரகடனத்தை ஆதரித்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐ.நாவில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கக் கோரும் நியூயார்க் பிரகடனத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. நியூயார்க் பிரகடனத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 142 நாடுகள் வாக்களித்துள்ளன. அதன்படி தீர்மானம் நிறைவேறியது.
இந்தியா ஆதரவு - அமெரிக்கா எதிர்ப்பு
நியூயார்க் பிரகடனத்திற்கு எதிராக 10 நாடுகள் வாக்களித்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி, அர்ஜெண்டினா, பப்புவா நியூகினியா, பராகுவே, டோங்கா உள்ளிட்ட நாடுகள் இந்த பிரகடனத்துக்கு எதிராக வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளன.
வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் ஐ.நா. உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இந்த வாக்கெடுப் நடைபெற்றுள்ளது. இந்த உச்சி மாநாட்டிற்கு ரியாத் மற்றும் பாரிஸ் இணைந்து தலைமை தாங்குகின்றன. அந்த உச்சி மாநாட்டில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதாக உறுதியளித்துள்ளார்.
நெதன்யாகு பேச்சு
இதற்கிடையே, பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் ஒரு புதிய யூத குடியிருப்பை அமைக்கும் விழா நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "இனி ஒருபோதும் பாலஸ்தீனம் என்னும் நாடு அமையாது. இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது. பாலஸ்தீன நாடு இருக்காது என்ற எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றப் போகிறோம். நாங்கள் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்" என்று பேசியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications