நடுவானில் மயங்கிய துணை விமானி: அவசரமாக தரையிறக்கப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம்
ஹூஸ்டன்: அமெரிக்காவில் ஹூஸ்டனில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் துணை விமானி மயக்கம் அடைந்ததை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டனில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் 1614 கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகருக்கு செவ்வாய்க்கிழமை காலை பயணிகளுடன் கிளம்பியது. விமானம் நடுவானில் செல்கையில் துணை விமானி சுயநினைவை இழந்தார்.

இதையடுத்து விமானி விமானத்தை சான் பிரன்சிஸ்கோவுக்கு பதில் நியூமெக்சிகோ மாநிலத்தில் உள்ள அல்புகர்கு நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கினார். விமானம் தரையிறக்கப்பட்ட பிறகு துணை விமானிக்கு நினைவு திரும்பியது. இதையடுத்து அவராகவே விமானத்தில் இருந்து இறங்கினார்.
விமானத்தில் இருந்து இறங்கிய துணை விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அரிசோனா மாநிலத்தில் இருக்கும் ஃபீனிக்ஸ் நகரில் இருந்து 147 பயணிகளுடன் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பாஸ்டன் நகருக்கு சென்ற விமானத்தின் கேப்டன் திடீர் என்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதையடுத்து துணை விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications