உத்தரபிரதேச சிறுமிகள் படுகொலை – ஐ.நா.சபை கடும் கண்டனம்
உஷைத்: உத்தர பிரதேசத்தில் இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவத்திற்கு ஐ.நா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உஷைத் கிராமத்தைத் சேர்ந்த, 14, 15 வயதுள்ள இரு சிறுமிகள் கடந்த 27 ஆம் தேதி இரவு காணாமல் போயினர்.

இதுகுறித்த வழக்கை காட்ரா சதாத்கஞ்ச் காவல்துறை பதிவு செய்ய மறுத்தது. 28ஆம் தேதி காலை இரு சிறுமிகளின் உடல்களும் மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டன.
இச்சம்பவத்தால் வெகுண்டெழுந்த கிராம மக்கள் காவல்துறை யின் அலட்சியத்தைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கினர்.இதைத்தொடர்ந்து காவல்துறை யினர் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு காவலர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப் பட்டனர். பிரேதப் பரிசோதனையில் இரு சிறுமிகளும் கும்பலால் பலாத் காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது படுபயங்கரமான செயல் எனவும், கொடூர குற்றச் செயல் எனவும் ஐ.நா.வின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபனே துஜ்ஜாரிக் தெரிவித்துள்ளார்.
"ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications