செக் குடியரசு மீது சைபர் அட்டாக்.. சீனாவுக்கு வார்னிங் கொடுத்த அமெரிக்கா
வாஷிங்டன்: செக் குடியரசு நாட்டு தகவல் தொடர்பு கட்டமைப்பு மீது சீனா சைபர் தாக்குதல் நடத்த முயற்சி செய்த்ததாக அந்த நாடு வைத்துள்ள புகார் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்காக சீனாவை கண்டித்துள்ள அமெரிக்கா, பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்று சீனாவுக்கு அறிவுறுத்தலும் வழங்கியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போர் ஓய்ந்தாலும், அமெரிக்கா - சீனா இடையிலான பனிப்போர் ஓயவில்லை. செக் குடியரசு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சீனா மீது ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளது. செக் குடியரசு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "செக் குடியரசு நாட்டு வெளியுறவுத்துறை தகவல் தொடர்பு மீது சைபர் அட்டாக் நடந்துள்ளது.

எங்கள் நாட்டு மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்த சைபர் குற்றவாளிகளை அம்பலப்படுத்துகிறோம். இதன் பின்னணியில் சீனா உள்ளது. சீனா எங்கள் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கிறது. சைபர் அட்டாக் மூலம் எங்கள் தகவல்களை திருடி, அதை வேறு வகையில் தவறான பிரச்சாரத்தை முன்னெடுக்க பார்க்கிறார்கள்.
இதற்கு எதிராக நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதை நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டறிந்துவிட்டது. இந்த நடவடிக்கையை நாம் கடுமையாக கண்டிக்கிறோம்." என்று கூறியுள்ளனர். மேலும் அந்த நாட்டுக்கான சீன தூதருக்கு சம்மன் அனுப்பி நேரடியாக விசாரணை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து செக் குடியரசு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் லிவாப்ஸ்கி, "இதுபோன்ற சட்ட விரோத செயல்கள் இரு நாட்டு உறவை கடுமையாக பாதிக்கும். இது சீனாவின் நம்பக்கத்தன்மையை கேள்வி குறியாக்கியுள்ளது." என்று தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சீனா மீது செக் குடியரசு வெளியிட்டுள்ள இந்த குற்றச்சாட்டு உலகளவில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியம், ஜெர்மனி, ஐரோப்பா ஒன்றியம், நேட்டோ நாடுகள் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் செக் குடியரசுக்கு ஆதரவு தெரிவித்து, சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் அமெரிக்காவும் இடம் பெற்றுள்ளது.
அமெரிக்கா இந்த விவகாரத்தில் வெளிப்படையாக செக் குடியரசுக்கு ஆதரவு சொல்லி, "சீனாவுக்கு கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. சீனா பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்." என்று கூறியுள்ளது.
இதேபோல பல உலக நாடுகளும், "உலக விதிகளை மீறி இப்படி சைபர் அட்டாக் நடப்பதை எந்த வகையிலும் பொறுத்துக் கொள்ள முடியாது." என்று சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனால் சீனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications