லிபியா அருகே படகு கவிழ்ந்து விபத்து - 400 பேர் நீரில் மூழ்கி பலி
ரோம்: லிபியா அருகே நிகழ்ந்த படகு விபத்தில் சுமார் 400 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆப்ரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு சண்டையை அடுத்து திருட்டு தனமாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லிபியா பகுதியில் இருந்து புறப்பட்ட படகு ஒன்றில் சுமார் 540 பேர் வரை பயணம் செய்துள்ளனர். இத்தாலி நாட்டின் கடற்பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

இவ்விபத்தை அடுத்து இத்தாலி கப்பல் படையை சேர்ந்த வீரர்கள் சுமார் 140 பேர்களை மட்டும் உயிருடன் மீட்டனர். பலியானவர்களில் பெரும்பாலும் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்தில் இறந்து போனவர்களின் 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மாயமானோர் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

இதுபோல் விபத்து நடப்பது இது முதல் முறை இல்லை. ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளில் நடைபெரும் உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரணமாக பலர் பிழைப்பு தேடி ஐரோப்பாவிற்கு ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்ளும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகிறார்கள் என்பது வேதனைக்குறியதாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications