“தலைகீழ்” வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் சீனாவுக்கு வாங்க…

Subscribe to Oneindia Tamil

சீனா: நீங்கள் எல்லாரும் ஒரு வீட்டின் மேற்கூரையில் நடக்க முடிந்தால் என்ன செய்வீர்கள்?

ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள் அல்லவா?அதுதான் நடக்கின்றது சீனாவில்.

சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில் சீனாவின் ஷாங்காய் நகரில் இந்த "தலைகீழ்" வீடு உருவாக்கப்பட்டுள்ளது.

தலைகீழ் பர்னிச்சர்:

தலைகீழ் பர்னிச்சர்:

இந்த வீட்டில் பர்னிச்சர்கள் உட்பட எல்லாமே தலைகீழாக அமைக்கப்பட்டுள்ளன.ஏன் சாப்பிடும் மேசை கூட தலைகீழாக அமைக்கப்பட்டுள்ளது.

அலைமோதும் கூட்டம்:

அலைமோதும் கூட்டம்:

தினமும் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த வீட்டில் ஒரு புகைப்படமாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அலைமோதுகின்றனர்.

கோடை விடுமுறை:

கோடை விடுமுறை:

அங்கு கோடைக்கால விடுமுறை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று பல நூறு மக்கள் சுற்றுலாவிற்காக இந்த வீட்டை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

சற்றே நிமிர்ந்தேன்:

சற்றே நிமிர்ந்தேன்:

"இந்த வீட்டுக்குள் நுழைந்ததும் நான் கொஞ்சம் தலை சுற்றித்தான் போய்விட்டேன்.எல்லாமே தலைகீழாய் அமைந்துள்ளது இந்த வீட்டில்.இது மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது.

தலை சுற்றிப் போனேன்:

தலை சுற்றிப் போனேன்:

ஆனால்,இந்த வீட்டின் தளம் சாய்ந்து இருப்பதால்தான் நான் தலை சுற்றிப் போனதாக உணர்கின்றேன்" என்று 27 வயதான ஹுங் ஹூய் தெரிவித்துள்ளார்.

குளியலறை வினோதம்:

குளியலறை வினோதம்:

மற்றொரு சுற்றுலாப் பயணியான சன் மின்ஜீஓ, குளியலறை கூட தலைகீழாய் இருப்பதைப் பார்த்து வியந்து போய்விட்டதாக தெரிவித்துள்ளார்.

”தண்ணீர்” பயம்:

”தண்ணீர்” பயம்:

"அந்த சிறிய டாய்லெட் வடிவமைப்பு, என் மனதில் பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கி விட்டது.மிகுந்த கலை ஆர்வத்துடன் இந்த வடிவமைப்பை உருவாக்கியுள்ளனர்.அதைப் பார்த்தபோது எங்கே தண்ணீர் தலையில் ஊற்றிவிடப் போகின்றது என்று பயந்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.

நல்லவேளை விழவில்லை:

நல்லவேளை விழவில்லை:

9 வயதான வாங்க் யிஜின் இன்னும் அந்த தலைகீழ் ஆச்சரியத்தில் இருந்து விடுபட முடியாமல் வீட்டிற்கு வெளியில் வந்துள்ளார்."வீட்டின் மேற்கூரையில் நிற்பது போலவே நான் உணர்ந்தேன்.விசயம் என்னவென்றால் நான் கீழே விழவில்லை என்பதுதான்" என்று கூறியுள்ளார்.

5 மாத வடிவமைப்பு:

5 மாத வடிவமைப்பு:

இந்த வீடானது பாலீஸ் டிசைனர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த வீட்டின் கட்டமைப்பு நவம்பரில் ஆரம்பித்து, 5 மாதங்கள் எடுத்துக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

500 ரூபாய் அற்புதம்:

500 ரூபாய் அற்புதம்:

இந்த வீட்டில் ஒருமுறை நின்று, ரசித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள அதிகமாக ஒன்றும் இல்லை இந்திய மதிப்பில் 500 ரூபாய்தான் என்று கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+