எங்களின் வான் வெளி தாக்குதலால் ஐஎஸ்ஐஸ் தீவிரவாதிகளை முடக்க முடியாது: அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்கா நடத்திய வான் வெளி தாக்குதலால் ஈராக்கில் முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் குறைந்துள்ளது. ஆனால் அவர்களை முடக்கிப்போட முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் வில்லியம் மெவில் கூறுகையில்,
ஈராக்கில் விமானம் மூலம் தாக்குதல் நடத்துவதை விரிவுபடுத்தும் திட்டம் அமெரிக்காவிடம் இல்லை. வடக்கு ஈராக்கில் உள்ள சிஞ்சார் மலைப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளவர்களுக்கு உதவி செய்யவும், எர்பில் பகுதியில் உள்ள அமெரிக்கர்களை பாதுகாக்க வான் வெளி தாக்குதல் நடத்தவும் அதிபர் ஒபாமா உத்தரவிட்டார். இதையடுத்து அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படை விமானங்கள் 15 முறை தாக்குதல் நடத்தியுள்ளன.

அமெரிக்காவின் தாக்குதல்களால் ஐஎஸ்ஐஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் குறைந்துள்ளன. ஆனால் இது நிரந்தரம் இல்லை. எர்பில், மேவில் ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகளின் வேகம் குறைந்துள்ளது. ஆனால் அவர்கள் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள பிற பகுதிகளில் செயல்படுவதை தடுக்க முடியாது.
ஈராக்கில் மேலும் பல பகுதிகளை கைப்பற்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் குர்திஷ் பாதுகாப்பு படை, யசிதி மக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவார்கள். கடந்த 7ம் தேதி முதல் அமெரிக்காவும், இங்கிலாந்தும் சிஞ்சார் மலையில் உள்ள யசிதி மக்களுக்கு விமானம் மூலம் 14 முறை உணவும், நீரும், மருந்தும் வழங்கியுள்ளன என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications