கமேனி உயிரிழந்ததாக டிரம்ப் அறிவித்த மறுநொடி.. அவரிடமே இருந்து வந்த போஸ்ட்.. என்ன தான் நடக்கிறது?
தெஹ்ரான்: ஈரான் உச்ச தலைவர் கமேனியை கொன்றுவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகுவும் கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு அறிவிப்பையே வெளியிட்டிருந்தார். இந்தச் சூழலில் தான் கமேனியின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் இருந்து ஒரு போஸ்ட் வந்தது. இது அவர் உயிருடன் இருக்கிறாரோ என்ற கேள்விகளை முதலில் எழுப்பியது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஈரானைக் குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் பல முக்கிய பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஈரானும் கூட பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் மிகவும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு முழுக்க ஒரு போர் வெடித்துள்ளது போன்ற சூழல் உருவாகியுள்ளது.

டிரம்ப் அறிவிப்பு
இந்தச் சூழலில் தான் சில மணி நேரத்திற்கு முன்பு, ஈரானி உச்ச தலைவர் கமேனி உயிரிழந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார். வரலாற்றில் மிகவும் கொடூரமானவர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார் என்றும் ஈரான் நாட்டை மீட்க அந்நாட்டு மக்களுக்குச் சரியான தருணம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கமேனி ட்வீட்
இதற்கிடையே டிரம்ப்பின் இந்த அறிவிப்பு வந்த கொஞ்ச நேரத்திலேயே கமேனியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஒரு போஸ்ட் பதிவிடப்பட்டுள்ளது. 86 வயதான கமேனி, தெஹ்ரானில் நடந்த அமெரிக்க- இஸ்ரேலிய தாக்குதல்களில் உயிர் பிழைத்தாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்த நிலையில், இந்த பதிவு கவனம் பெறுகிறது. கமேனி தனது ட்விட்டரில் பாரசீக மொழியில் அந்த போஸ்ட்டை பகிர்ந்துள்ளார்.
அமெரிக்கத் தாக்குதல் தொடர்பாகவும் தான் உயிரிழந்தது தொடர்பாகப் பரவும் தகவல் குறித்தோ அவர் எந்தவொரு பதிவையும் பகிரவில்லை. மாறாக "நமி ஹைதர் பெயரால் அமைதி உண்டாகட்டும்" என்று மட்டும் பதிவிடப்பட்டுள்ளது. இதனால் கமேனி கொல்லப்பட்டாரா அல்லது உயிர் தப்பிவிட்டாரா என்பதில் தெளிவு இல்லாமல் குழப்பமான சூழலே இருந்தது.
ஈரான் ஊடகங்கள்
முதலில் ஈரான் நாட்டின் பல்வேறு அரசு ஊடகங்களும் கமேனி உயிரிழக்கவில்லை என்றே செய்திகளை வெளியிட்டன. கமேனி களத்தில் உறுதியாகவும் திடமாகவும் கட்டளையிடுகிறார் எனக் கூறியது. கமேனி முற்றிலும் பத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக ஈரான் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.
ஆனால், கொஞ்ச நேரத்திலேயே ஈரான் அரசு ஊடகங்களும் கமேனி உயிரிழப்பை உறுதி செய்தன. நேற்று சனிக்கிழமை நடந்த தாக்குதலில் கமேனி உயிரிழந்ததாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்தனர்.
கமேனி மரணம்
86 வயதான அயதுல்லா அலி கமேனி 1989ஆம் ஆண்டு முதல் ஈரானின் தலைவராக இருந்து வருகிறார். நாட்டின் உச்ச தலைவராக, ஷியா இஸ்லாமிய குடியரசான ஈரானில் அரசின் அனைத்து கிளைகள், ராணுவம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் மீது அவருக்கு முழுமையான அதிகாரம் உண்டு. கமேனியின் மரணம் உறுதியானால், 1989 ஆம் ஆண்டு முதல் அவர் வழிநடத்தி வரும் இஸ்லாமிய குடியரசுக்கு இது ஒரு மிகப்பெரிய அடியாக அமையும்.
எதிர்பாராத விதமாக கமேனி உயிரிழந்துள்ள நிலையில், 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா- இஸ்ரேல் படைகள் மீது வரலாறு காணாத அளவுக்குத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் இது மோசமான பதிலடியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications