இந்தியாவில் LNG விலை அப்படியே சரியப்போகுது.. அமெரிக்கா-சீனா மோதலால் நமக்குதான் லாபம்!
பெய்ஜிங்: அமெரிக்கா கடந்த காலங்களில் சீனாவுக்கு எல்என்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவை சப்ளை செய்து வந்தது. ஆனால் தற்போது இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தக போர் தொடங்கியிருப்பதால் கடந்த 10 வாரங்களாக எல்என்ஜி கப்பல் சீனாவுக்கு அனுப்பப்படவில்லை. இதனால் இந்தியாவில் இதன் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.
விலை குறைந்தாலும் வர்த்தகத்தில் போட்டி அதிகமாகும் என்பதால் விலை குறைவு நீடித்து இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்திய தகவல்களின்படி, கடந்த 10 வாரமாக அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு எல்என்ஜி ஏற்றுமதி செய்யப்படவில்லை. கடைசியாக பிப்.6ம் தேதி டெக்சாசிலிருந்து வந்த ஒரு எல்என்ஜி கப்பல் சீனாவின் ஃபுஜின் மாகாணத்திற்கு சென்றது. ஆனால் அதன் பின்னர் எந்த கப்பலும் செல்லவில்லை. பிப்.10ம் தேதி அமெரிக்காவின் எல்என்ஜி மீது சீனா 15 சதவிகித வரியை அறிவித்தது. எனவே சீனாவுக்கு வரவேண்டிய இரண்டாவது கப்பல் அப்படியே வங்கதேசத்திற்கு திருப்பிவிடப்பட்டது.
இன்றைய தேதியில் இந்த வரி 49% ஆக அதிகரித்திருக்கிறது. எனவே அமெரிக்காவிடமிருந்து எல்என்ஜியை வாங்குவது சீனாவுக்கு லாபமற்றதாக மாறியிருக்கிறது. எனவே சீனா எரிவாயு சப்ளைக்கு ரஷ்யாவை சார்ந்திருக்க தொடங்கியிருக்கிறது. ரஷ்யாவும் சப்ளையை சீராக வைத்திருக்கிறது. இந்த பினைப்பு சீனா-அமெரிக்காவின் எல்என்ஜி ஒப்பந்தத்தை நிரந்தரமாக பாதித்திருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறியிருக்கின்றனர். எல்லாம் ஓகேதான் இதில் இந்தியாவுக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்களா?
லாபம் இருக்கிறது. சீனா அமெரிக்காவின் எரிவாயுவை வாங்க மறுப்பதல், கையில் இருக்கும் ஸ்டாக்கை விற்று தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா இருக்கிறது. யார் தலையில் இதை கட்டுவது என்று எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதன் காரணமாக விலையும் சரியும். இருக்கிற கையிருப்பை காலி செய்ய அமெரிக்கா விலையை குறைக்கவும் தயங்காது. இது இந்தியாவுக்கு லாபம். ஏனெனில் அமெரிக்காவே விலையை குறைக்கிறது எனில் மற்ற நாட்டின் நிறுவனங்களும் விலையை குறைத்துவிடும்.
எனவே சர்வதேச சந்தையில் விலை குறையும். இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கும். இந்த எரிவாயுவை பயன்படுத்துவோருக்கு இது அற்புதமான வாய்ப்பு. சீனா கையை விரித்துவிட்டதால் மாற்று நாடுகளை அமெரிக்கா தேடும். அமெரிக்காவுக்கு இருக்கும் மற்றொரு ஆப்ஷன் இந்தியாதான். எனவே நீண்ட காலத்திற்கு எல்என்ஜி எரிவாயு ஒப்பந்தத்தை இந்தியாவுடன் போட அமெரிக்கா முற்சிக்கும்.
ஆனால் இதில் இன்னும் சில விஷயங்களையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது, சீனா-அமெரிக்கா மோதல் சர்வதேச அளவில் இந்தியாவை பாதிக்கும். நம்முடைய வளர்ச்சி உள்ளிட்டவை இதனால் பாதிப்படைய கூடும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமென்ட்டில் கூறுங்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications