வந்துருச்சு அவுட்டர்நெட்...யுஎஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு
வாஷிங்டன்: அமெரிக்க கம்பெனியான எம்டிஎப்ஐ இனி உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் தாராளமாக இணையத்தை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்த கம்பெனி "அவுட்டர் நெட்" விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பி இந்த வசதியை உருவாக்க உள்ளது.
இன்டர்நெட் கேள்விப்பட்டிருக்கிறோம். அவுட்டர் நெட் தெரியுமா? அவுட்டர் நெட் என்னும் ஒரு புது வகை இணைய வசதியை இந்த அமெரிக்க கம்பெனியினர் உருவாக்கியுள்ளனர். இது தற்போது சோதனை நிலையில் உள்ளது. அதாவது "கியூப்ஸாட்" என்னும் சிறு சிறு விண்கலங்கள் விண்வெளிக்கு அனுப்பபட்டு கம்பியில்லா இணைய வசதியை தோற்றுவிக்கும். இதன் மூலம் உலகத்தின் எந்த மூலையிலும் இலவச இன்டெர்நெட் பெற முடியுமாக்கும்.
மேலும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து பேருக்கும் இணைய இணைப்பு கொடுக்க வெறும் 100 சிறிய கியூப்ஸாட்கள் தான் தேவையாம். இதன் மூலம் உலகத்தின் ஒவ்வொரு நிலம் , கடல் ,பாலைவனம் என்று அத்தனை இடத்துக்கும் இணைய வசதி கிடைக்கும். இதில் எந்த தடங்கலும் இருக்காது .ஏன் எனில் இது ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.அதிக செலவு,தடங்கல்களால் இன்று வரை அதிக மக்கள் இணைய இணைப்பு பெற இயலாமல் உள்ளனர்.
ஆனால்,இந்த சோதனை மட்டும் வெற்றி அடைந்தால் துணை கருவிகள் மூலம் எளிதாக நாம் இணைய வசதியை பெற முடியும்.
அக்கம்பெனி இதற்கான வேலைகளில் விரைவாக ஈடுபட்டு வருகிறது.வரும் ஏப்ரலில் இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்க உள்ளன.
ஏற்கனவே இன்டர்நெட்டில் ஏகப்பட்ட கிரைம் பார்ட்டிகள் நாஸ்தி செய்து வருகிறார்கள். இதில் அவுட்டர்நெட் வேறயா.. அவுட்ஸ்டாண்டிங்காக குற்றச் செயல்கள் பெருகாமல் இருந்தால் சரிதான்...
-
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications