கலவரத்தில் சீக்கியர்கள் பலி... சோனியாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்க நீதிமன்றம்
நியூயார்க் : சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இ்நத கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்துக்கு காரணமான காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி பாதுகாத்து வருவதாக கூறி, அமெரிக்காவில் உள்ள நீதிக்கான சீக்கியர்கள் என்ற சீக்கிய அமைப்பு, அங்குள்ள மாகாண நீதிமன்றத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
சோனியா காந்திக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரையன் கோகன், வழக்கில் உள்ள அனைத்து சம்பவங்களும் அமெரிக்காவுக்கு வெளியே நடந்தது எனக்கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து அங்குள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சீக்கிய அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்ததுடன், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து தீர்ப்பை எதிர்த்து இந்த வழக்கில் மறுவிசாரணை கோரி மீண்டும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக சீக்கிய அமைப்பு கூறியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications