56 வருட குரோதம் முடிவுக்கு வருகிறது.. பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் அமெரிக்கா, கியூபா!
வாஷிங்டன் : அரை நூற்றாண்டிற்கும் மேலாக நீடித்து வந்த விரோதம் மறைந்து நட்பு பாராட்டத் தொடங்கியுள்ள அமெரிக்காவும், கியூபாவும் இருநாட்டு உறவு குறித்து இம்மாதம் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இத்தகவலை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவுடன் கடந்த 56 ஆண்டுகளாக பகைமை பாராட்டி வந்தது கியூபா. இந்நிலையில், கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நல்லெண்ண நடவடிக்கைகளால் இருநாடுகளும் நட்பு நாடாக மாறியது. உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது அமெரிக்காவின் இந்த முடிவு.

இந்நிலையில், இம்மாதம் 21 மற்றும் 22ம் தேதிகளில் அமெரிக்க - கியூபா பிரதிநிதிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அமெரிக்க செய்தி தொடர்பாளர் ஜென் பாகி.
ஹவானாவில் நடைபெற உள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க பிரதிநிதிகள் குழுவுக்கு அந்நாட்டின் அமைச்சர் ராபர்ட் ஜேக்கப்சன் தலைமை தாங்குகிறார். தற்போது பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கும் ராபர்ட் ஜேக்கப்சன் ஏற்கனவே பலமுறை அமெரிக்கா சார்பில் கியூபா சென்று வந்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வேண்டுகோளின் படி இருநாடுகளிலும் அந்நந்த நாடுகளின் தூதரகங்களை அமைப்பது மற்றும், தூதர்களை நியமிப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications