இந்தியாவுடனான நட்புறவு சீனா, பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல: அமெரிக்கா
வாஷிங்டன்: இந்தியாவுடனான நட்புறவு என்பது சீனா, பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் தெற்காசிய விவகாரங்களுக்கான மூத்த இயக்குநர் பில் ரீனெர் கூறியதாவது:
இந்தியா- அமெரிக்கா நட்புறவு முயற்சிகள் என்பது அடிப்படையில் எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. சீனாவை கவனத்தில் கொண்டு இருநாடுகளும் இணைந்து செயல்படுவதாக கூறப்படுவதும் சரியானது அல்ல.
இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவது என்பது இருநாட்டு நலன்களின் அடிப்படையிலானது. தெற்காசிய பிராந்தியத்தில் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா பங்களிப்பு செய்கிறது.

ஏற்கெனவே உள்ள் சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றியே இருநாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த பிராந்தியத்தில் உள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நாங்கள் நடத்தியும் வருகிறோம்.
இந்தியா- அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அது தொடர்பான பாகிஸ்தானின் விமர்சனம் ஏற்புடையது அல்ல. ஏற்கெனவே உள்ள ஒரு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம்தான் தற்போது போடப்பட்டிருக்கிறது. அனைத்து நாடுகளுடனும் அமெரிக்கா நட்புறடன் இருக்கவே விரும்புகிறது.
இவ்வாறு பில் ரீனெர் கூறினார்.
அமெரிக்கா அதிபர் ஒபாமா இந்தியா வருகை தந்த போது, அமெரிக்காவின் சதி வலையில் இந்தியா வீழ்ந்துவிடக் கூடாது என்று சீனா பகிரங்கமாக எச்சரித்திருந்தது. மேலும் பாகிஸ்தானும் இந்தியா- அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications