ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இடியை இறக்கிய அமெரிக்கா.. பயம் காட்டும் புதிய வகை போர் விமானம்!
சனா: செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்களை குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது அவர்களுக்கு எதிராக அமெரிக்கா B-2 ஸ்டெல்த் பாம்பர்களை களமிறக்கியுள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில், ஹமாஸை அழிப்பதாக கூறி, பாலஸ்தீனத்தை, இஸ்ரேல் சர்வ நாசம் செய்துவிட்டது. ஐநா மன்றத்தில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் கூட இஸ்ரேல் தனது தாக்குதலின் தீவிரத்தை குறைக்கவில்லை. மறுபுறம் ஹமாஸுக்கு ஆதரவாக ஏமனிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் ஆதரவு கப்பல்கள் மீது தாக்குதல்களை தொடுத்தனர்.

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆதரவுடன் செங்கடலில் நுழையும் எந்த கப்பலையும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் விட்டு வைக்கவில்லை. பெரும்பாலும் வணிக கப்பல்கள்தான் இந்த தாக்குதலால் பாதிக்கப்படட்ன. ஏடன் வளைகுடாவிலும் ஹூதி ஆட்டம் கொஞ்சம் ஓவராக போய்க்கொண்டிருந்தது. இதனால் ஆத்திரமடந்த அமெரிக்கா சமயம் பார்த்து காத்திருந்தது. இந்நிலையில் தற்போது ஏமனில் உள்ள ஹூதி அமைப்பின் ஆயுத கிடங்குகள் மீது அமெரிக்கா சரமாரிகாக தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது.
இதற்காக B-2 ஸ்டெல்த் பாம்பர் எனும் அதிநவீன போர் விமானத்தை அமெரிக்கா களமிறக்கியுள்ளது. பொதுவாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் தங்களின் ஆயுதங்களை பூமிக்கு அடியில் பாதுகாப்பாக சுரங்கம் தோண்டி மறைத்து வைத்திருப்பார்கள். சாதாரண போர் விமானங்களால் இந்த ஆயுதங்களை அழிக்க முடியாது. எனவேதான் B-2 ஸ்டெல்த் பாம்பர் களமிறக்கப்பட்டிருக்கிறது.
இதன் சிறப்பம்சமே, ரேடாரில் தெரியாமல் மறைவதுதான். எனவே நினைத்த இடத்திற்கு இதனால் தடையின்றி செல்ல முடியும். மட்டுமல்லாது மற்ற போர் விமானங்களை ஒப்பிடுகையில் இது அதிக அளவுக்கு ஏவுகணைகளை ஏந்தி செல்லும். ஏவுகணைகள், கொத்து குண்டுகள் என சுமார் 18,144 கி.கி எடை கொண்ட ஆயுதங்களை சுமந்துக்கொண்டு, 11,100 கி.மீ தூரம் வரை பறக்க முடியும். எனவே ஏமனின் ஹூதி இலக்குகள் எல்லாம் இதற்கு ஜூஜூபி.
தற்போது நடந்து வரும் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பிறகும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பதில் தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா நேரடியாக போரில் இறங்கவும் வாய்ப்பு இருக்கிறது.
மறுபுறம், ஹூதி இதற்கு உடனடியாக பதிலடி கொடுக்காமல் ரஷ்யாவுடன் இணைந்து, தந்திரமான முறையில் பதிலடி கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எது எப்படி இருப்பினும் போர்கள் இல்லாத உலமே அனைவரின் விருப்பமாக இருக்கிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications