அன்பு, பாசம், நேசம், அக்கறை, காதல்.. எல்லாவற்றையும் விட இவர்... அப்பா!
Recommended Video

டெட்ராய்ட்: மகள்களை நேசிக்காத அப்பாக்கள் உண்டா... அப்பாக்களை பிரிய நினைக்காத மகள்கள்தான் உண்டா?".. இங்கே இரண்டு பாசமும் ஒன்று கலந்து ஒரு விமானத்தில் ஓடிய நெகிழ்ச்சி சம்பவத்தைப் பாருங்கள்.
அமெரிக்காவின் ஒஹையோவை சேர்ந்தவர் பியர்ஸ் வாகன். இவரது தந்தை ஹால் வாகன். மகள் மீது தீராப் பாசம். மகள் இல்லாவிட்டால் இவருக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. அப்படியேதான் பியர்ஸுக்கும்.
பியர்ஸ், விமான நிறுவனம் ஒன்றில் விமானப் பணியாளராக பணியாற்றுகிறார். கிறிஸ்துமஸ் தினத்தன்று விடுமுறை கிடைக்கவில்லை. வேலைக்குப் போயாக வேண்டிய நிலை. இதனால் ஹால் சோகமாகி விட்டார். ஆனால் டக்கென்று தலைக்குள் ஒரு பல்பு பளீரென எரிந்தது.. ஆ ஐடியா என்று துள்ளிக் குதித்த அவர் செய்த அடுத்த காரியம்தான் ஆச்சரியமானது.

ஏறு விமானத்தில்
தனது மகள் கிறிஸ்துமஸ் தினத்தன்றும், அடுத்த நாளும் எந்தெந்த விமானங்களில் பணியாற்றுகிறாரோ அந்த விமானங்களில் எல்லாம் டிக்கெட் போட்டார் ஹால். மகளுக்கோ ஆச்சரியம்.. ஏம்ப்பா இப்படி என்று கேட்டபோது, நீ இல்லாமல் எப்படி கிறிஸ்துமஸ்.. ஸோ, கூடவே வர்றேன்.. சேர்ந்து கொண்டாடுவோம் என்று ஹால் கூறி விட்டார்.

ஹேப்பி பயணம்
பியர்ஸுக்கு டபுள் ஹேப்பி. பிறகென்ன மகள் பணியாற்றிய விமானங்களில் ஏறி இறங்கி மகளுடனேயே பயணித்து மகளுக்கு அந்த கிறிஸ்துமஸை மறக்க முடியாத திருவிழாவாக்கினார் ஹால். ஒன்று அல்ல இரண்டு அல்ல, மொத்தம் 6 விமானங்களில் ஏறி இறங்கினார், இந்த 60 வயதைத் தாண்டிய பெரியவர்.. ஸாரி.. அன்புள்ள அப்பா!.

சக பயணியின் நெகிழ்ச்சி
ஹாலுடன் பயணித்த மைக் லெவி என்ற சக பயணிக்கு இந்த கதை தெரிந்து வியப்பாகி விட்டார். ஹாலுடன் உடனே ஒரு செல்பி எடுத்தார். பியர்ஸையும் ஒரு போட்டோ எடுத்தார். பேஸ்புக்கில் போட்டார். இந்த பாசக் கதை இப்போது உலகெங்கும் பரவி வைரலாகி விட்டது.

பூரிப்பில் மகள்
பியர்ஸுக்கோ அப்பாவை நினைத்து பெரும் சந்தோஷம், பூரிப்பு. வேலைக்கு இடை இடையே அப்பாவை வந்து பார்த்து அவருடன் சிரித்துப் பேசி கிறிஸ்துமஸை எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் சந்தோஷத்தோடு கொண்டாடினார். இருக்காதா பின்னே.. மகளுக்காக உருகும் அப்பாக்கள் எப்போதுமே ஸ்பெஷல்தானே!












Click it and Unblock the Notifications