“சார் என்ன வேணும் நண்டா, மீனா, இறாலா?”.. ‘சர்வர் சுந்தரி’ ஆனார் ஒபாமாவின் சின்னப் பொண்ணு!
நியூயார்க்: விடுமுறைக் காலங்களை பயனுள்ள முறையில் செலவிடும் வகையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இளைய மகள் கடல் உணவு விற்கப்படும் பிரபல உணவகம் ஒன்றில் சர்வராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு இரண்டு மகள்கள். அவர்களில் இளையவர் 15 வயதான சாஷா என்கிற நடாஷா.
சமீபத்தில் இவருக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனது மகளை கடல் உணவுகளை விற்பனை செய்யும் உணவகம் ஒன்றில் பணியில் சேர்த்து விட்டார் ஒபாமா. இது அவர்களது உறவினரின் கடைதான்.

சீருடை...
ஆனபோதும் மற்ற ஊழியர்களைப் போலவே, தானும் சீருடை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவுகளை வழங்குவது, அவர்கள் சாப்பிட்டுச் சென்றதும் மேஜையைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை நடாஷா செய்து வருகிறார்.

அனைத்து வேலைகளையும்...
அதோடு, பில் போடுவது மற்றும் காரில் இருந்துகொண்டு உணவுப் பொருட்களைக் கேட்பவர்களுக்கு கொண்டு சென்று பரிமாறுவது போன்ற பணிகளையும் அவர் செய்கிறார்.

பாதுகாப்பு...
அமெரிக்காவின் முதல் மகளான நடாஷா தினமும் இங்கு நான்கு மணி நேரம் வேலை பார்த்து வருகிறார். இருப்பினும், அதிபரின் மகள் என்பதால் ஆறு காவல் அதிகாரிகள் நடாஷாவின் பாதுகாப்பைக் கண்காணித்து, வேலை முடிந்ததும் அவரை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒபாமாவின் விருப்பம்...
அதிபரின் மகளாக இருந்தாலும், தனது மகள் சாதாரண வாழ்க்கையின் அனுபவங்களைப் பெற வேண்டும் என்று பெற்றோர்களாக தாங்கள் விரும்புவதாக ஒபாமாவின் மனைவியும், நடாஷாவின் தாயுமான மிச்செல் ஒபாமா தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications