Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் ஏர்போர்ட்டில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதில் விமானம் இரண்டாகப் பிளந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான விபத்து காரணமாகப் பலர் மிக மோசமாகக் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விமானத்தை இயக்கிய பைலட்டும், துணை பைலட்டும் இதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பொதுவாகவே விமானங்களில் மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் உயர் பாதுகாப்பு தான் இருக்கும். ஆனால், அதையும் தாண்டி சில நேரங்களில் அரிதாக விபத்துகள் நடந்துவிடும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

US flight accident Air Canada Plane Rams Truck at LaGuardia Multiple Injuries Reported in Collision

விபத்து

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லா க்வார்டியா விமான நிலையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விமானப் போக்குவரத்து கண்காணிப்பு வலைத்தளமான FlightRadar24 இது குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளது. அதாவது விமான நிலையத்தில் இருந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்றும் தீயணைப்பு வாகனமும் மோதியுள்ளது.

விமான நிலையத்தின் ஓடுபாதை 4ல் ஏற்பட்ட இந்த விபத்தில் விமானம் இரண்டாகப் பிளந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த விபத்தின் காரணமாகப் பலருக்குக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சி தரும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. விபத்து காரணமாக விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உயிரிழப்பு

இந்த விபத்தில் விமானி மற்றும் இணை விமானி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மோசமான வானிலைக்கு நடுவே, அந்த விமானம் கேட்டை நோக்கிச் செல்லும்போது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

மாண்ட்ரியலில் இருந்து வந்த இந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுதளத்தில் இருந்த தீயணைப்பு வண்டியுடன் மோதியுள்ளது. விமானம் மணிக்கு சுமார் 39 கி.மீ வேகத்தில் மோதியதாக ஃபிளைட்ரடார்24 குறிப்பிட்டுள்ளது. இதில் தீயணைப்பு வண்டியில் இருந்த இரு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். அவர்கள் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. அவர்கள் உடல்நிலை சீராக உள்ளனர்.

பகீர் வீடியோ

இது தொடர்பான போட்டோ வீடியோக்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறது. அதில் விமானத்தின் மூக்கு பகுதி, அதாவது பைலட் இருக்கும் பகுதி தனியாகப் பிளந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. விமானத்தின் முன்புறப் பகுதிகளிலேயே மிகக் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட போது விமானத்தில் 72 பயணிகளும், 4 பணியாளர்களும் இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

விபத்து நடந்தபோது , விமானக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட ஆடியோவும் வெளியாகியுள்ளது. அதில் அதிகாரிகள் தீயணைப்பு வாகனத்தைத் தொடர்ந்து எச்சரித்துள்ளது பதிவாகியுள்ளது. தயவு செய்து அங்கேயே நில்லுங்கள்.. உடனடியாக நில்லுங்கள் எனத் தொடர்ச்சியாக எச்சரிக்கை போனது பதிவாகியுள்ளது.

தடை

இந்த விபத்தைத் தொடர்ந்து, விமான நிலைய செயல்பாடுகள் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் அனைத்து புறப்பாடுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல மற்ற பகுதிகளில் இருந்து வரும் விமானங்களும் அருகே உள்ள ஏர்போர்ட்களுக்கு திருப்பி விடப்பட்டன.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்குப் பல விமான நிலையங்களில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. விமான போக்குவரத்தை நிர்வகிக்கும் டிஎஸ்ஏ அமைப்பிலும் நிதிப் பற்றாக்குறை இருக்கிறது. இதுவும் கூட விமான விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. அதேநேரம் விபத்திற்குக் காரணம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+