இந்தியாவை சேர்ந்த 700 பேருக்கு அரசியல் தஞ்சம் கொடுத்த அமெரிக்கா
வாஷிங்டன்: 2014ம் ஆண்டு அமெரிக்காவில் 700 இந்தியர்களுக்கு அரசியல் புகலிடம் கிடைத்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றப் பிரிவு புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 2013ம் ஆண்டு 419 ஆக இருந்தது. 2014ல் இது உயர்ந்து காணப்பட்டது.
கலிபோர்னியாவில் செயல்படும் பஞ்சாப்-அமெரிக்கர்கள் அமைப்பு ஒன்று இந்த தகவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அரசியல் புகலிடம் பெற்றவர்கள் 2013ஆம் ஆண்டில் 419ஆக இருந்தது என்றும் அதுவே 2014 ஆம் ஆண்டில் 700 ஆக அதிகரித்துள்ளது என்றும் அந்த அமைப்பை சேர்ந்தவர் தெரிவித்தார்.

இதில் அமெரிக்காவின் நீதி அமைப்பு மூலம் அரசியல் புகலிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் அரசியல் புகலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தபடியே உள்ளது கவலை தரும் விஷயம் என்றும் அந்த அமைப்பின் தலைவர் சாத்னம் சிங் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications