நீண்ட போருக்குள் தள்ளப்படும் ஈரான்.. ஏற்பாடுகளை தீவிரப்படுத்திய அமெரிக்கா! காமெனி கொடுத்த வார்னிங்
தெஹ்ரான்: ஈராக்-அமெரிக்கா இடையே ஏற்பட்ட போர், பல ஆண்டுகளாக நீடித்தது. அதேபோல ஈரான்-அமெரிக்கா இடையேயும் போர் பல ஆண்டுகளுக்கு தொடரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. எப்படி இருந்தாலும் தாக்குதலை எதிர்கொள்ள தயார் என்று ஈரான் தலைவர் காமெனி தெரிவித்திருக்கிறார். அதே நேரம், அமெரிக்காவுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
நேற்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே பேசிய காமெனி, "அமெரிக்க அதிகாரத்தையும் சியோனிச(இஸ்ரேல்) ஆட்சியையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இஸ்ரேல் அமெரிக்காவின் கையில் இருக்கும் கயிறு கட்டிய வளர்ப்பு பிரானி" என்று கடுமையாக சாடியுள்ளார்.

சமீபத்தில்தான் ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. ஈரான் வசம் உள்ள அணு சக்தி, அணு ஆயுததத்திற்காக பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது என்று சொல்லி இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கான ஆதாரங்கள் எதுவும் பொது வெளியில் வைக்கப்படவில்லை. அதே நேரம் ஈரான் வசம் அணு ஆயுதங்கள் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈரானும் இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்து இஸ்ரேல் மீது சரமாரியாக பதில் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் மீது மட்டுமல்லாது கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தை தாக்கியது. இதனால் அமெரிக்கா பயங்கர கடுப்பாகியிருக்கிறது.
இந்த சூழல்கள் எல்லாம் சேர்ந்து, ஈரான் மீதான தாக்குதலை அடுத்த கட்டத்திற்கு அமெரிக்கா கொண்டு செல்லும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஈராக் மீது அமெரிக்கா ஒரு காலத்தில் போரை நடத்தியிருந்தது. அந்த போர், சுமார் 9 ஆண்டுகள் வரை நீடித்தது. அப்படி ஒரு போரை அமெரிக்கா, ஈரான் மீது உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ரஷ்யாவை பயன்படுத்தி, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்கா விரும்பியது. ஏனெனில் இன்று ஈரானில் இருக்கும் அணு ஆய்வு மையங்கள் அனைத்தும் ரஷ்யாவின் உதவியால் கட்டப்பட்டது. எனவே ரஷ்யா சொன்னால் ஈரான் மறுக்காது என்று நம்பியது. அது உண்மைதான். ஆனால், இந்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா முன்வரவில்லை. உக்ரைன் விஷயத்தில் இன்னும் பஞ்சாயத்துகள் பெண்டிங் இருக்கையில், ஈரான் சர்ச்சைக்குள் எப்படி நுழைவது? என பேச்சுவார்த்தைக்கு முன்வர மறுத்துவிட்டது.
இப்போது ஈரான் மீதான தாக்குதலுக்கு அனைத்து வாய்ப்புகளும் அமெரிக்காவுக்கு திறந்திருக்கிறது. நீண்ட போருக்கான ஒரு பெரிய தாக்குதலை தொடங்குவது மட்டும் பாக்கி. அதையும் விரைவில் இஸ்ரேல் செய்யும். இப்படி நீண்ட கால போருக்குள் ஈரானை தள்ளுவதன் மூலம், அது சோர்வடைந்து தோல்வியடையும் என்று அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது.
உண்மை என்னவெனில், ஈரான் இந்த போருக்கு முழுமையாக தயாராகி வருகிறது. போருக்கு தேவையான ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது. குறிப்பாக, வான் பாதுகாப்பு அம்சங்களை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் நீண்ட கால போர் ஆசியாவில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications