ஒரேயொரு சின்ன மிஸ்டேக்.. மொத்த நேட்டோவும் காலி! கிரீன்லாந்து விஷயத்தில் US சொதப்பினால் இதுதான் ஆகும்
நூக்: வட அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய கண்டத்திற்கும் நடுவில் இருக்கும் பனி பிரதேசம்தான் கிரீன்லாந்து. ஏராளமான எண்ணெய் வளம் இங்கு இருக்கிறது. எனவே இதனை விலைக்கு வாங்க டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில் இந்த திட்டத்திற்கு கிரீன்லாந்து மக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அதேபோல, வலுக்கட்டாயமாக கிரீன்லாந்தை அமெரிக்கா இணைத்தால், நேட்டோ கூட்டணி முடிவுக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது.
கிரீன்லாந்து மக்களாகிய நாங்கள், அமெரிக்கர்களின் ஆளுகைக்கு உட்பட விரும்பவில்லை என்றும், நாங்கள் விற்பனைக்கல்ல என்றும் கூறியுள்ளனர். அந்நாட்டின் பெரும்பாலான மக்கள் டிரம்பின் இந்த ஐடியாவை கடுமையாக எதிர்க்கின்றனர்.

கிரீன்லாந்து மக்கள் கண்டனம்
கிரீன்லாந்து, பல நூற்றாண்டுகளாக டென்மார்க்குக்கு சொந்தமாக இருந்து வருகிறது. இப்பகுதியை வாங்க அமெரிக்கா தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. தேவைப்பட்டால் பலவந்தமாக அதைக் கைப்பற்றத் தயாராக இருப்பதாக, ட்ரம்ப்பும் அவரது அதிகாரிகளும் முன்னதாகவே மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தனர். உலகின் மிகப்பெரிய தீவாகிய கிரீன்லாந்திலும், இதர பகுதிகளிலும் வாழும் கிரீன்லாந்து மக்களிடையேயும் இது பதற்றத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அச்சம் அதிகரிப்பு
வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாதக் குற்றச்சாட்டுகளுக்காக வீடு புகுந்து அமெரிக்கா கடத்தியிருந்தது. இந்த நடவடிக்கைக்கு பின்னர் கிரீன்லாந்து மக்களிடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்த நடவடிக்கையானது முன்னெப்போதும் இல்லாத ஒரு இராணுவ நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவுடன், கிரீன்லாந்துதான் அடுத்தது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர்.
மக்கள் என்ன சொல்கிறார்கள்?
அமெரிக்காவின் இந்த யோசனை குறித்து பிபிசியிடம் பேசிய உள்ளூர் மக்கள், "வெனிசுலா விவகாரத்தை பார்த்த பின்னர்தான், அமெரிக்கா பேசிக்கொண்டிருப்பது விளையாட்டான விஷயம் கிடையாது என்று எங்களுக்கு புரிந்தது. கிரீன்லாந்தை சேர்ந்த எல்லோருடைய மனதிலும் தற்போது இந்த பதற்றம் இருக்கிறது. நான் வேலைக்காக கனடாவில் வசித்து வருகிறேன்.
விஷயம் சீரியஸாவதை பார்த்த உடன், கிரீன்லாந்தில் வசிக்கும் எனது சகோதரிக்கு போன் செய்து, அமெரிக்கா நினைப்பது நிஜமானால்.. கவலைப்பட வேண்டாம், நீ கனடா வந்துவிடு. உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னேன். அவள் இதை கேட்டு அழுதுவிட்டாள்" என்று கூறியுள்ளார்.
கிரீன்லாந்து எம்பிக்கள்
டேனிஷ் நாடாளுமன்றத்தில், கிரீன்லாந்தை சேர்ந்த எம்பியான ஆஜா செம்னிட்ஸ், ட்ரம்ப் நிர்வாகத்தின் கருத்துகள் தெளிவான அச்சுறுத்தல் என்று கூறியிருக்கிறார். "எங்கள் நாட்டையும், நேட்டோ கூட்டணியில் உள்ள மற்றொரு நாட்டையும் இணைக்கும் சாத்தியக்கூறுகளை அமெரிக்கா கைவிட மறுப்பது முற்றிலும் மரியாதையற்ற செயல். நாங்கள் கைவிடப்பட்டதாக நினைக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.
கிரீன்லாந்து ஏன் முக்கியம்?
கிரீன்லாந்து உலகின் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட பிரதேசமாகும். ஆர்க்டிக் தீவின் பெரும்பகுதி பனியால் சூழப்பட்டிருப்பதால், பெரும்பாலான மக்கள் தலைநகர் நூக் மற்றும் அதைச் சுற்றியுள்ள தென்மேற்கு கடற்கரைப்பகுதியில் வாழ்கின்றனர். ஆனால் இது அமெரிக்காவிற்கு இந்த இடம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால்தான் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா அங்கு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
காசு பார்க்கும் அமெரிக்கா
வட அமெரிக்காவிற்கும், ஆர்க்டிக் பகுதிக்கும் இடையில் கிரீன்லாந்து அமைந்திருப்பதால், ஏவுகணைத் தாக்குதல்கள் ஏற்பட்டால்.. ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளுக்கு இது மிகச்சிறந்த இடமாக அமைகிறது. சமீபத்தில், காலநிலை மாற்றத்தால் பனி உருகி, அரிய மண் தாதுக்கள் உட்பட கிரீன்லாந்தின் இயற்கை வளங்களை அணுகுவது எளிதாகி வருவதால், அதை எடுத்து அதன் மூலம் காசு பார்க்க முடியும் என்பதாலும் கிரீன்லாந்து மீது அமெரிக்கா கண்ணாக இருக்கிறது.
நேட்டோ முடிவுக்கு வரும்
கிரீன்லாந்தை இராணுவம் மூலம் கையகப்படுத்தல் அமெரிக்காவிற்கு எளிதான ஒரு காரியமாக இருக்கும். ஆனால், அது புவிசார் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தி, நேட்டோ கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவரும்.
கிரீன்லாந்தை கைப்பற்றுவதை குறித்து அமெரிக்க பேச தொடங்கிய பின்னர், 6 ஐரோப்பிய நட்பு நாடுகள் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டன. அதில், கிரீன்லாந்தின் எதிர்காலத்தை அதன் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் வலியுறுத்தியிருந்தனர். கிரீன்லாந்து நேட்டோவில் உறுப்பினராக இருக்கிறது. இந்த உறுப்பினர் மீது பலவந்தமாக ராணுவ படையெடுப்பை நடத்தினால்.. நாளை பின்பு வேறு நேட்டோ நாடுகள் மீதும் இதுபோன்ற படையெடுப்பு நடக்காது என என்ன நிச்சயம்? எனவேதான், நேட்டோ அமைப்பு சீர்குலையும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
-
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்! -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications