சீனாவை விடுங்க.. இந்தியாவுக்கு வார்னிங் கொடுத்த டிரம்ப்! இதை செய்தால் வரி தாக்குதல் நிச்சயம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு விதித்த வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருக்கிறது. இருப்பினும் வரி அல்லாமல் வேறு சில வழிகளில் அமெரிக்காவை மூன்றாம் நாடுகள் ஏமாற்றுவதாக டிரம்ப் கூறியிருக்கிறார். அப்படியான நாடுகள் மீது மீண்டும் வரி தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இதனால் இந்தியாவுக்கு சிக்கல் எழுந்திருக்கிறது.

டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ள சில விஷயங்களில் இந்தியாவும் வருகிறது. எனவே இந்தியா வரி யுத்தத்தை எதிர்க்கொள்ளும் அபாயத்தில் இருக்கிறது.

US tariff trade

1. நாணய மதிப்பு மாற்றம்
2. VAT வரிகள்
3. தரத்திற்கு குறைவாக விற்பனை
4. ஏற்றுமதி மானியங்கள்
5. விவசாய பாதுகாப்பு விதிமுறைகள்
6. பாதுகாப்பு தொழில்நுட்ப விதிமுறைகள்
7. காப்புரிமை
8. டிரான்ஸ்ஷிப்பிங்

இந்த 8 விஷயத்தை டிரம்ப் சுட்டிக்காட்டி இருக்கிறார். தற்போது அமெரிக்க விதித்துள்ள வரிகள் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் வரிக்கு சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் பதிலடி வரியை விதித்திருக்கிறது. மற்ற நாடுகள் பதிலடி வரியை விதிக்கவில்லை. குறிப்பாக இந்தியாவை எடுத்துக்கொண்டால், நாம் பதிலடி வரியை விதிக்கவில்லை.

இப்படி பதிலடி வரி விதிக்காமல், மற்ற சில நடவடிக்கைகள் மூலமாக மூன்றாம் நாடுகள் அமெரிக்காவுக்கு நெருக்கடி தருவதாக விமர்சித்திருக்கிறார். எந்த வழிகளில் நெருக்கடியை தருகின்றன என்பதைதான் மேற்குறிப்பிட்ட 8 பாயிண்ட்கள் மூலம் விளக்கியுள்ளார்.

நாணய மதிப்பு மாற்றம்

இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டால், ஒரு நாடு தன்னுடைய கரன்சியின் மதிப்பை திடீரென அதிகரிக்கும். இதனால் இந்த நாட்டிலிருந்து தயாரித்து அமெரிக்காவில் விற்கப்படும் பொருட்களின் விலை குறைவாக இருக்கும். உதாரணத்திற்கு சீனாவின் நூடுல்ஸ் அமெரிக்காவில் நேற்று வரை 10 டாலருக்கு விற்பனை செய்து வந்திருக்கும். ஆனால், சீனா தனது நாணயத்தின் மதிப்பை அதிகரிக்கும். இதனால் அமெரிக்காவில் சீன நூடுல்ஸ் விலை 9 டாலராக குறையும். இது வர்த்தகத்தை அதிகரிக்கும்

ஏற்றுமதி வரிகள்

VAT வரிகள் என்பது சில நாடுகள் இறக்குமதிக்கு வரியை விதிக்கின்றன. ஆனால், ஏற்றுமதிக்கு வரியை விதிக்காமல் இருக்கிறது. இந்தியா இதை செய்கிறது. எனவே அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. அதேபோல தரத்திற்கு குறைவாக விற்பனை என்பது, ஒரு பொருள் 10 ரூபாய் செலவில் உற்பத்தி செய்யப்படுகிறது எனில், அதை 8 ரூபாய்க்கு வைத்து விற்பனை செய்வது அமெரிக்காவின் வர்த்தகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று டிரம்ப் அஞ்சுகிறார். சீனா இந்த வேலையை செய்கிறது.

உணவு பொருள் பாதுகாப்பு

ஏற்றுமதி மானியங்களை எடுத்துக்கொண்டால், இந்தியா இதில் சிக்கும். இந்திய அரசு தையல், வேளாண்மை, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்களுக்கு மானியத்தை வழங்குகிறது. அதே போல விவசாய பாதுகாப்பு விதிமுறைகளை பொறுத்த அளவில், இந்தியாவும் சில வெளிநாட்டு உணவுப்பொருட்களுக்கு விதிமுறைகளை விதிக்கிறது. 8வதாக சொல்லப்பட்டிருக்கும் காப்புரிமை மீறல் பிரச்சனைகளும் இருக்கின்றன.

இந்தியாவுக்கு சிக்கல்

அதேநேரம், கடைசி பாயிண்ட்டாக சொல்லப்பட்டிருக்கும் டிரான்ஸ்ஷிப்பிங் என்பது, ஒரு பொருளை ஒரு நாட்டில் உற்பத்தி செய்து, அதை வேறு நாடுகள் வழியாக அமெரிக்காவில் விற்பதை இப்படி குறிப்பிடுவார்கள். இதை சீனா செய்கிறது.

எது எப்படி இருப்பினும், சீனா குறிப்பிட்டுள்ள 8 பாயிண்ட்களில் 3 விஷயங்களில் இந்தியா சிக்கியுள்ளது. எனவே இந்தியாவும் எதிர்காலத்தில் டிரம்ப்பின் வரி அச்சுறுத்தலில் சிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+