Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரான் சற்றும் எதிர்பார்க்காத விஷயம் நடந்திருக்கு.. இனி ஒவ்வொரு நாளும் ரொம்ப கஷ்டம்

Subscribe to Oneindia Tamil

அமெரிக்க கடற்படை கொண்டு ஈரான் துறைமுகங்களுக்கு விதித்துள்ள வர்த்தக முடக்கம், ஈரானின் உணவு சப்ளையை உடனடியாக பாதித்துள்ளது. தற்போது ஈரானுக்கு சென்றுக் கொண்டு இருக்கும் 9.83 லட்சம் டன் உணவு பொருட்கள் ஈரான் துறைமுகத்தில் இறக்குமதி செய்ய முடியாதபடி அமெரிக்க முடக்கியுள்ளது. இதனால் ஈரான் நாட்டில் போர் தாக்குதலை தாண்டி உணவு பற்றாக்குறை பாதிப்பு பெரியதாக வெடிக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

அமெரிக்க கடற்படை ஹார்முஸ்-ல் நுழைந்தது முதல் ஈரான் துறைமுகங்கள் அனைத்தும் முழுமையாக தனது செயல்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஈரானின் கடல்வழி சரக்கு போக்குவரத்து மொத்தமாக முடங்கியுள்ளது. இதனால் ஈரான் நாட்டுக்கான உணவு இறக்குமதி தடைபடும், ஈரானில் உணவு விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது.

Iran war USA Trump Iran Food Crisis 2026 Strait of Hormuz Blockade Impact US Iran Food Shortage Global Fertilizer Crisis Iran Rice Price Hike 2026 US Strait of Hormuz blockade Iran food crisis 983000 tons food shipments Iran blocked Iran food shortage 2026 skyrocketing food prices Iran Iran rice price increase sevenfold Iran vegetable oil price hike Iran import reliance rice corn oil global fertilizer shortage Hormuz world food prices rise 2026 2027 Caspian Sea grain alternative Iran Iran triple digit food inflation Tehran food price increase 40 percent Iran domestic food production 70 percent Hormuz blockade global supply chain US blockade Iran economic impact 9 83 2026 2026 2027 40 70

ஈரானின் உணவு நெருக்கடி

ஈரான் ஏற்கனவே உணவு பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் போக்குவரத்து - வர்த்தக தடை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. ஈரான் நாட்டில் உணவுப் பொருட்களின் விலை வானத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் அரிசி விலை ஏழு மடங்கும், காய்கறி எண்ணெய் விலை மூன்று மடங்கும் உயர்ந்துள்ளது.

டெஹ்ரானில் வசிக்கும் மக்கள் போருக்குப் பிறகு அதாவது பிப்ரவரி 28ஆம் தேதிக்கு பின்னர் உணவு பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்திருப்பதாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

ஈரான் தனது உணவில் சுமார் 70 சதவீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறது. ஆனால் அரிசியில் 77 சதவீதம், சோளத்தில் 89 சதவீதம், சமையல் எண்ணெயில் 91 சதவீதம் இறக்குமதியைச் சார்ந்துள்ளது. ஈரான் நாட்டின் பணவீக்கம் 47.5 சதவீதமாக இருந்த நிலையில், ரியால் நாணயத்தின் மதிப்பு குறைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் பொருட்கள் வாங்கும் சக்தி அதாவது purchasing power பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாற்று வழி

ஈரான் இந்தத் தடையை சமாளிக்க ரஷ்யாவிலிருந்து காஸ்பியன் கடல் வழியாக தானியம் இறக்குமதி செய்ய முயற்சி செய்கிறது. ஆனால் இந்த வழி முழுமையாக பயன்படுத்த முடியாது. காஸ்பியன் கடல் ஆழமற்றது மற்றும் நிலப்பரப்புக்கு அருகில் உள்ளது. இதனால் பெர்சியன் வளைகுடா வர்த்தக அளவுக்கு இந்த வழித்தடம் போதுமானதல்ல. இதனால் ஈரானின் உணவு பற்றாக்குறை உடனடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரச்சனை மாறியது

இதேபோல தான், ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது மூலம் உலகளாவிய விவசாய உர வர்த்தகத்திற்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியது. உலகளாவிய விவசாய உரம் மற்றும் அதன் மூலப்பொருட்களில் போக்குவரத்தில் 25 முதல் 30 சதவீதம் ஹார்முஸ் வழியாகத்தான் செல்கிறது. ஈரான் போட்ட தடை காரணமாக இந்த ஏற்றுமதி மொத்தமாக நின்றுவிட்டது.

தற்போது பல நாடுகளில் முக்கியமான பயிரிடும் காலம் என்பதால் ஹார்முஸ் முடக்கம் விவசாய உற்பத்தி பாதிக்கும் நிலை உருவானது. 2026 இறுதி மற்றும் 2027-ல் உலகளவில் உணவு விலை பெரிதும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அமெரிக்க கடற்படையால் இந்த நிலைமை ஈரானுக்கு மாறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+