அமெரிக்க பிணை கைதியை தலையை வெட்டி கொலை செய்து வீடியோ வெளியிட்ட ஐஎஸ்ஐஎஸ்
பெய்ரூட்: சிரியா நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த பணியாளர் தலையை வெட்டி கொலை செய்துள்ளதாக தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். மேலும் பல சிரியா ராணுவ வீரர்களையும் தலையை துண்டித்துக் கொலை செய்து அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர் தீவிரவாதிகள்.
அமெரிக்கரான அப்துல் ரகுமான் கஸ்சிக், சிரியா நாட்டில் பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தீவிரவாதிகளால் இவர் கடத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் உலா வருகிறது. அந்த வீடியோவில் முகமூடி அணிந்திருக்கும் நபர் ஒருவர் கையில் வெட்டப்பட்ட தலையுடன் நின்றபடி கஸ்சிக்கை கொலை செய்துள்ளதாக கூறுகிறார்.

கடந்த மாதம்தான் கஸ்சிக் அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்திலுள்ள தனது பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், எந்த மனிதனும் அனுபவிக்க கூடாதாத அவஸ்தை, பயத்துடன் தான் வாழ்ந்து வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் அவரை கழுத்தை அறுத்து தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவின் உண்மை தன்மை ஆராயப்பட்டு வந்தபோதிலும், இதற்கு முன்பு இதேபோல வெளியான வீடியோக்கள் உண்மையானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
மேலும் அந்த வீடியோவில் சிரியா நாட்டு ராணுவ வீரர்கள் பலரின் தலைகளும் வெட்டப்பட்ட காட்சி உள்ளது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications