அதிபரின் விழாவிற்கு வாருங்கள்... அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்தியரின் மனைவிக்கு அழைப்பு!
அமெரிக்காவில் சென்ற வருடம் கொல்லப்பட்ட இந்தியரின் மனைவிக்கு உயரிய மரியாதை அளிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

வாஷிங்கடன்: அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் அதிபர் டிரம்ப் அந்த வருடம் குறித்து பேசுவார். அந்த நிகழ்விற்கு மிகவும் முக்கியமான நபர்கள் மட்டும் அழைக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் அந்த விழாவிற்கு ஹைதராபாத்தை சேர்ந்த 'சுனாயானா டுமாலா' என்ற பெண் அழைக்கப்பட்டு இருக்கிறார். இவருடைய கணவர் 'ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா' சென்ற வருடம் அமெரிக்காவில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
இந்த நிகழ்விற்கு இன்னும் சிலரும் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா
சென்ற வருடம் பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு மக்களுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வந்தது. அப்போதுதான் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற ஹைதராபாத்தை சேர்ந்த இந்தியர் பாரில் வைத்து கொலை செய்யப்பட்டார். இன்னொரு இந்தியருக்கு இதில் மோசமாக காயம் ஏற்பட்டது.

என்ன காரணம்
ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவை சுட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு நபர்களை வெளியே அனுப்ப வேண்டும் என்று அந்த நபர் பேட்டி அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இந்த சம்பவம் காரணமாக அமெரிக்க அதிபருக்கு எதிராகவும் கருத்துக்கள் பேசப்பட்டது.

மனைவிக்கு அழைப்பு
தற்போது ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவின் மனைவி சுனாயானா டுமாலாவுக்கு உயரிய மரியாதையை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் அதிபரின் விழா ஒன்றிற்கு இவர் அழைக்கப்பட்டு இருக்கிறார். உயர்பதவியில் இல்லாத இந்தியர்ஒருவர் இந்த நிகழ்விற்கு அழைக்கப்படுவது இதுவே முதல்முறை.

இன்னும்
இந்த விழாவிற்கு மறைந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் மனைவிகள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் சில முன்னாள் சிஐஏ அமைப்பை சேர்ந்த நபர்களும் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்ற வருடம் முழுக்க நடந்த முக்கிய சம்பவங்கள் குறித்து இதில் பேசுவார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications