ஈரான் தலைவர் கமேனி + மகனை கொல்ல அமெரிக்கா சதி.. டிரம்ப் போடும் பிளான்.. அதிரவைக்கும் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் ஈரான் மீதான தாக்குதல் மட்டுமின்றி அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது மகன் மோஜ்தபா கமேனி ஆகியோரையும் கொல்லும் திட்டம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு டிரம்ப் அதிபரானதுமே இந்த மோதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இதுதொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே 2 கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.

டிரம்புக்கு போன விஷயம்
இதனால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து ஈரானை மிரட்டி வருகிறார். விரைவில் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி வருகிறார்.
மேலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் டொனால்ட் டிரம்ப் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை குவித்து வருகிறார். ஈரான் மீதான தாக்குதல் பற்றி முழு விவரங்கள் டிரம்புக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், டிரம்ப் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
2 பேரையும் கொல்ல திட்டம்
இதனால் ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடத்தும் நிலை உள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்காவின் ஆக்சியோஸ் நிறுவனம் பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளது. டிரம்பின் மூத்த ஆலோசகர்கள் சொன்னதாக சில விஷயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது ஈரான் மீதான தாக்குதல் வெறும் தாக்குதலாக மட்டுமின்றி அயதுல்லா அலி கமேனியையும் அவருக்கு பின்னால் அந்த பொறுப்புக்கு வரக்கூடிய மகன் மோஜ்தபா கமேனியையும் கொல்லும் திட்டம் பற்றி டிரம்பிடம் விளக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டிரம்பின் முடிவு என்ன?
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில் ஒரு ஆலோசகர், ‛‛அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்னும் ஈரானை தாக்கும் முடிவை எடுக்கவில்லை. ராணுவ நடவடிக்கைக்கான முடிவை டிரம்ப் எடுக்காமல் கூட போகலாம். இல்லாவிட்டால் நாளையே அந்த முடிவை அவர் எடுக்கலாம்.
இந்த விஷயத்தில் டிரம்ப் என்ன முடிவு எடுப்பார் என்பது யாருக்கும் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் டிரம்புக்கே கூட தெரியாது என்று நினைக்கிறேன்'' என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகன் மோஸ்தபா காமேனி யார்?
அதேபோல் இன்னொரு ஆலோசகர், ‛‛ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது மகன் மோஜ்தபா கமேனி ஆகியோரை கொல்லும் திட்டம் டிரம்ப் முன்பு ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில விஷயங்களால் இன்னும் செயல்படுத்தவில்லை. மேலும் எந்த வேளையிலும் ஈரானை தாக்கலாம்'' என்றார்.
இதனால் அமெரிக்கா, ஈரான் அதிபர் டொனல்ட் டிரம்ப், ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது மகன் மோஜ்தபா கமேனியை கொல்ல திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மோஜ்தபா கமேனி தற்போது இஸ்லாமிய மதகுருவாக உள்ளார். அயதுல்லா அலி கமேனிக்கு பிறகு மோஜ்தபா கமேனி தான் ஈரானின் உச்சபட்ச தலைவராகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் அமெரிக்கா அவரையும் குறிவைத்துள்ளார்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications