இமயமலையே சூடாகிடுச்சு.. சீன எச்சரிக்கையை மீறி தலாய் லாமாவை சந்தித்த அமெரிக்க பிரதிநிதிகள்
தரம்சாலா: சீனாவின் எதிர்ப்பை மீறி திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவை அமெரிக்காவின் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் சந்தித்திருக்கின்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், சீனா தலாய் லாமாவுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
சமீப நாட்களாக சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. ஏற்கனெவே பல நாடுகளில் இதுபோன்ற தலையீடுகளை மேற்கொண்டு வந்த அமெரிக்கா தற்போது சீனா பக்கம் தீவிரமாக திரும்பியிருக்கிறது. இதற்காகாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரான நான்சி பெலோசியை முன்னிறுத்தி காய் நகர்த்தி வருகிறது.

முதலில் தைவான் விவகாரத்தில் நான்சி பெலோசியின் தலையீடு ஓவராக இருந்தது. தைவான் தனி ஒரு நாடாக இயங்கினாலும் சீனாவைப் பொறுத்தவரையில் ஒருங்கிணைந்த நாட்டின் மாகாணமாகவே கருதுகிறது. ஒற்றை சீனா என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளும் உலக நாடுகள், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியே தைவான் என்பதை ஏற்க வேண்டும் என்கிறது.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், தைவான் - சீனா விவகாரத்தில் குழப்பமான நிலைப்பாடுகளைத்தான் கடைப்பிடித்து வருகின்றன. ஒற்றைச் சீனா கோட்பாட்டையும் ஏற்றுக் கொண்டு, தைவான் ஒரு தனிநாடு என்பதையும் ஏற்றுக் கொண்டு கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. இப்படித்தான் கடந்த 2022ம் ஆண்டு முதன் முதலாக பெலோசி தைவானுக்கு வந்திருந்தார். இந்த வருகையை முன்கூட்டியே கணித்த சீனா, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இருந்தும் இதை எதையும் கண்டுக்கொள்ளாமல் பெலோசி தைவான் வந்திருந்தார். விளைவு, தைவான் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சீன ராணுவம் தீவிர போர் ஒத்திகையை மேற்கொண்டது. அப்போதிருந்து இப்போது வரை இந்த பதற்றம் குறையவே இல்லை.
இப்படி இருக்கையில் தற்போது இந்தியாவுக்கு வந்து கொம்பு சீவி விடும் வேலையை தொடங்கியுள்ளார். அதாவது, திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமாவை பெலோசி தலைமையிலான அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்புக்கு சீனா ஏற்கெனவே கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது. ஆனாலும், வழக்கம் போல இதை கண்டுக்கொள்ளலாமல் அமெரிக்கா பெலோசியை இறக்கி ஆழம் பார்த்திருக்கிறது. இதனால் தெற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் சூடுபிடித்திருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்குள் வருவதற்கு முன்னர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் 'தலாய் லாமாவுடன், சீனா ஒத்துழைப்பு நல்க வேண்டும்' என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில்தான் அமெரிக்க பிரதிநிதிகள் தர்மசாலாவில் தலாய் லாமாவை சந்திருக்கிறார்கள். இந்த குழுவின் தலைவரான மைக்கேல் மெக்கால்,
"திபெத்திய பௌதத்தை சீனா கட்டுப்படுத்த முயல்கிறது. வளர்ச்சி என்கிற போர்வையில் சிறுபான்மை சமூகத்தை சீனா புறக்கணிக்கிறது. இடம்பெயர கட்டாயப்படுத்துகிறது. இந்த விஷயத்தில் திபெத்துக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும். உங்கள் எதிர்காலம் குறித்த கனவு நிச்சயம் உயிரோடு இருக்கும். தலாய் லாமாவுடன், புனிதத்துடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டிய நேரம் இது" என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான், "சீனா தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். தலாய் லாமா முழுமையான மதம் சார்ந்த நபர் அல்ல, மாறாக மதம் என்ற போர்வையில் சீனாவுக்கு எதிரான பிரிவினைவாதச் செயல்களில் ஈடுபடும் நாடு கடத்தப்பட்ட அரசியல் பிரமுகர். சீனா-திபெத் விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளிக்கக்கூடாது" என்று கூறியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், 'திபெத்திய வரலாறு குறித்தும், மக்கள் குறித்தும் சீனா கூறும் கருத்துக்களுக்கு எதிராக போராட அமெரிக்கா நிதி வழங்கும்' என கூறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications