"தில்"லுன்னா அது இதுதான்... "திருடர் குல திலகம்"னா அது இவர் மட்டும்தான்!
இர்வின், அமெரிக்கா: திருடர் குல திலகம் திகில் பாண்டியெல்லாம் இவரிடம் பிச்சை எடுக்க வேண்டும்... அப்படி ஒரு செயலைச் செய்துள்ளார் இந்த அமெரிக்கத் திருடன்.
தன்னிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரியின் பேட்ஜையே திருடியிருக்கிறார் என்றால் பாருங்களேன். அதுவும் விசாரணை நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே இப்படி ஆட்டையைப் போட்டு போலீஸாரை அதிர வைத்துள்ளார் இந்த திரு"டர்".

அந்த நபரின் பெயர் ராபர்ட் டிங்கிள்ஸ்டீன். 26 வயதுதான் ஆகிறது புள்ளையாண்டானுக்கு. இவரை கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி இர்வின் நகர போஸீஸார் கைது செய்து ஒரு வழக்குத் தொடர்பாக விசாரித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த இடத்தில் இருந்த பல போலீஸ் பேட்ஜுகளை இவர் திருடியுள்ளார். நைசாக தனது பாக்கெட்டில் ஒளித்துக் கொண்டார்.
அதே பகுதியில் இன்னொரு இடத்தில் பெண் ஒருவரையம் போலீஸார் விசாரித்துக் கொண்டிருந்தனர். இதற்காக அங்குமிங்குமாக அவர்கள் போய் வந்ததைப் பயன்படுத்தி பேட்ஜுகளை ஆட்டையைப் போட்டுள்ளார் ராபர்ட்.
விசாரணை முடிவில் அவரை விட்டு விட்டனர். இந்த நிலையில் கடந்த மாதம்தான் பேட்ஜ் திருட்டுப் போனது தெரிய வந்தது போலீஸாருக்கு. இதற்கிடையே, தான் திருடிய பேட்ஜுகளை மீண்டும் கொண்டு வந்து கொடுத்து மன்னிப்பும் கேட்டுள்ளார் ராபர்ட். இதையடுத்து அவர் மீது புதிய வழக்கைப் போலீஸார் போட்டுள்ளனர். அவர் மீது விரைவில் விசாரணை நடைபெறவுள்ளதாம்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications