நீதான்டா நண்பன்.. போர் நிறுத்தம் என்று கூறி, உக்ரைன் காலை வாரிய அமெரிக்கா!
மாஸ்கோ: உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நிறுத்தத்தை கொண்டு வர, உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா ஆக்கிரமிக்க அமெரிக்கா ஒப்புக்கொள்ள தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனுக்கு இத்தனை நாள் சப்போர்ட் செய்து வந்த அமெரிக்கா, தற்போது தடாலடியாக ரஷ்யா பக்கம் சாய்ந்திருக்கிறது. இந்த டிவிஸ்ட்டை எதிர்பார்க்காத ஜெலன்ஸ்கி கலங்கி போய் இருக்கிறார்.

என்ன நடந்தது?
அமெரிக்காவுக்கு போர் நிறுத்தம் தேவை. காரணம் உக்ரைனில் உள்ள கனிம வளங்களை சுரண்ட வேண்டும் என்பதுதான். இதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கெனவே போடப்பட்டிருக்கின்றன. இப்போது இருக்கும் ஒரே விஷயம் போர் நிறுத்தம் மட்டுமே. போரை நிறுத்தினால் கனிமங்களை தோண்டி எடுக்கும் பணிகளை தொடங்கிவிடலாம். ஆனால் போர் நிற்கவில்லை.
எனவே போர் நிறுத்தத்தை சாத்தியப்படுத்த, உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா ஆக்கிரமிக்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. இந்த விஷயத்தை ப்ளூம்பெர்க் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.
போர் ஏன்?
உக்ரைன் ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் சோவியத் உடைந்த பின்னர் உக்ரைன் தனி நாடாக உருவானது. இங்குதான் அமெரிக்காவின் நேட்டோ அமைப்பு உள்ளே வருகிறது. இதில் உக்ரைனை இணைக்க அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி விருப்பம் தெரிவித்தார். அமெரிக்காவும் இதை விரும்பியது. ஏனெனில் நேட்டோவில் இணையும் நாடுகளில் அமெரிக்க படைகள் நிலை நிறுத்தப்படும். உக்ரைன் என்பது இந்தியாவுக்கு பாகிஸ்தான் எப்படி பக்கத்து நாடோ, அதுபோல ரஷ்யாவுக்கு பக்கத்து நாடு.
நேட்டோவின் வேலை
பாகிஸ்தானில் சீன படைகளில் நிறுத்தப்பட்டால் நாம் சும்மா இருப்போமா? அதுபோலதான் அமெரிக்க படைகள் உக்ரைனில் நிறுத்தப்படுவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. உக்ரைன் நேட்டோவில் இணைய கூடாது. மீறி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் போர் தொடுப்போம் என ரஷ்யா எச்சரித்தது.
அப்படித்தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் போர் தொடங்கியது. இந்த போரில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். போருக்கு அமெரிக்கா வாரி வாரி பணத்தை இறைத்திருக்கிறது. அமெரிக்கா மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளும், பிரிட்டனும் கூட இதற்காக பணத்தை இறைத்திருக்கிறது. அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு டிரம்ப் அதிபராகியுள்ளார். கடந்த காலத்தில் அமெரிக்கா கொடுத்த காசை ரிட்டன் எடுக்க டிரம்ப் முயன்று வருகிறார்.
நீதான்டா நண்பன்
எனவேதான் கனிம வளங்களை தோண்டி எடுக்கும் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. எல்லாம் ஓகே ஆன நிலையில், தற்போது ரஷ்யா பக்கம் அமெரிக்கா சாய்ந்திருக்கிறது.
அதாவது போர் நிறத்தத்தை சாத்தியமாக்க கிரிமியா பகுதியை ரஷ்யா ஆள ஒப்புக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே கிரிமியாவை ரஷ்யாதான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இருப்பினும் சர்வதேச சட்டவிதிகளின்படி, கிரிமியா உக்ரைனுக்கு சொந்தம் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் அமெரிக்கா கூட, கிரிமியா விஷயத்தில் உக்ரைனுக்குதான் சப்போர்ட் செய்திருந்தது. இப்போது அந்தர் பல்டி அடித்திருக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், விவகாரம் பற்றி ப்ளூம்பெர்க் ஊடகம் எழுதியிருப்பது சர்வதேச நாடுகள் மத்தியில் விவாதமாக வெடித்திருக்கிறது.
இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ? என ஜெலன்ஸ்கி தலையில் கை வைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார். நீதான்டா நண்பன்!
இந்த விஷயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
-
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications