நேபாளத்தில் அமெரிக்க ராணுவ மீட்பு ஹெலிகாப்டர் மாயம்- 8 வீரர்களின் நிலைமை என்ன ஆனது?
காத்மாண்டு: நேபாள நிலநடுக்கத்தையடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஹெலிகாப்டரைக் காணவில்லை. அதில் இருந்த 8 பேரின் நிலைமை என்ன ஆனது என்பதும் தெரியவில்லை.
நேபாளத்தில் கடந்த மாதம் கடும் நிலநடுக்கம் தாக்கியதையடுத்து மீட்புப் பணியில் பல்வேறு நாட்டு ராணுவத்தினரும் தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இந் நிலையில் நேற்றும் அங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந் நிலையில் நேபாளத்தில் செரிகோட் என்ற கிராமத்தின் அருகே நேற்று மாலை 6 அமெரிக்க வீரர்கள், 2 நேபாள ராணுவத்தினருடன் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் மாயமானது. அது விபத்துக்குள்ளாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது. அதில் இருந்த 8 பேரின் நிலைமையும் தெரியவில்லை.
இந்த ஹெலிகாப்டர் பறந்த பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டரும் பறந்து கொண்டிருந்தது. இரு ஹெலிகாப்டர்களும் தகவல் பறிமாற்றத்திலும் ஈடுபட்டு வந்தன.
ஆனால், அமெரிக்க ஹெலிகாப்டர் கீழே விழுந்த சத்தமோ அல்லது கீழே விழுந்ததால் ஏற்பட்ட தீ காரணமாக எழும் புகைமூட்டம் ஏதும் காணப்படவில்லை. இதனால் அந்த ஹெலிகாப்டர் பெரிய அளவில் விபத்தை சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்றும் அமெரிக்க ராணுவம் கருதுகிறது.
ஆனால், அந்தப் பகுதியில் பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தியும் அமெரிக்க ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரம் ஆகி இருள் சூழ்ந்துவிட்டதால் தேடுதல் வேட்டையும் நிறுத்தப்பட்டுவிட்டது.
இன்று காலை வரை அந்த ஹெலிகாப்டருடன் தகவல் தொடர்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications