இது "குழந்தை" பாடும் தாலாட்டு.. ஆனா அமெரிக்காவுக்கு முகாரியா மாறிடும் போலயே!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வட கொரியா தயாரித்துள்ள கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை செயல்படும் நிலையில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேவும் இந்த ஏவுகணையில் பொருத்தும் அளவுக்கு சிறிய அளவிலான அணுகுண்டையும் வட கொரியா தயாரித்துள்ளதாகவும் அது சந்தேகப்படுகிறது.

இதுகுறித்த சந்தேகம் ஏற்கனவே அமெரிக்காவுக்கு இருந்து வந்தது. தற்போது இதை கிட்டத்தட்ட அமெரிக்க நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

US military views North Korean ICBM as 'operational'

இதுகுறித்து அமெரிக்க விமானப்படை அதிகாரி அட்மிரல் வில்லியம் கோர்ட்னி கூறுகையில் வட கொரியா தனது கேஎன் 08 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையில் அணு ஆயுதத்தைப் பொருத்தி, அமெரிக்க மண்ணைத் தாக்கும் பலத்துடன் இருப்பதாக நாங்கள் அனுமானிக்கிறோம். இது செயல்படும் நிலையில் இருப்பதாகவும் நாங்கள் அறிகிறோம் என்றார் அவர்.

கேஎன் 08 என்று அமெரிக்கா பெயர் வைத்துள்ள வட கொரிய ஏவுகணையின் உண்மையான பெயர் ஹுவாசாங் 13 (Hwasong-13). மொத்தம் 6 ஏவுகணைகளை வட கொரியா வைத்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த ஏவுகணையை இதுவரை வட கொரியா ஏவிப் பார்த்ததாக தெரியவில்லை என்றும் அமெரிக்கா கூறுகிறது. ஆனால் அது செயல்பாட்டு நிலையில் இருப்பதாகவும் அது கூறுகிறது.

இருப்பினும் வட கொரியாவை குறைத்து மதிப்பிட தாங்கள் தயாராக இல்லை என்றும் அமெரிக்கா கூறுகிறது.

அதேசமயம், கேஎன் 08 ஏவுகணைக்கு நம்பகத்தன்மை இல்லை என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் எலைன் பன் கூறியுள்ளார்.

வட கொரியா இந்த ஏவுகணையை அணிவகுப்பில் மட்டுமே காட்டியுள்ளது. இதுவரை இதை சோதனை செய்து பார்க்கவில்லை என்பது பன் கூறும் வாதமாகும். இருப்பினும் வட கொரியா தற்போது வைத்துள்ள ஏவுகணையை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக மாற்ற முடியும் என்கிறார்கள்.

எது எப்படியோ வட கொரிய வைத்துள்ள ஏவுகணை நிச்சயம் அமெரிக்காவுக்குப் பாதகமானது என்பதில் சந்தேகம் இல்லை என்றும் அமெரிக்க நிபுணர்கள் கருதுகிறார்கள்.

தற்போதைய நிலையில் ரஷ்யா மற்றும் சீனா, ஆகிய நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் அதை முறியடிக்கக் கூடிய ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம் அமெரிக்காவிடம் இல்லை. காரணம், அதைத் தாக்கித் தகர்த்து விடக் கூடிய வசதிகளுடன் இந்த இரு நாடுகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+