2015ல் அமெரிக்கா.. வெள்ளை மாளிகையின் லென்ஸ் பார்வையில்!
வாஷிங்டன்: 2015ம் ஆண்டு இதோ நாளை விடைபெறப் போகிறது. கட்டக் கடைசியாக இந்த ஆண்டில் நடந்ததை அத்தனை பேரும் மனதுக்குள் வேகம் வேகமாக அசை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவும் இதற்கு விதி விலக்கல்ல.. அமெரிக்க அரசு அருமையான புகைப்படத் தொகுப்பை வெளியிட்டு 2015ம் ஆண்டை நினைவு கூர்ந்துள்ளது.
ஒவ்வொரு புகைப்படமும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை என்பதில் சந்தேகம் இல்லை. வெள்ளை மாளிகை புகைப்படக் கலைஞர்கள் எடுத்த புகைப்படங்கள் இவை. அதிலிருந்து...

நடந்தா திருவிழா!
அலபாமா மாகாணத்தில் உள்ள செல்மா நகரில் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிவில் உரிமை பேரணியின் பொன் விழா பேரணியில் அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் தங்களது குடும்பத்தினருடன், இன்ன பிறருடன் கலந்து கொண்ட காட்சி இது.

செல்லக்குட்டிகள்
ஜப்பான் பிரதமர் அபேவுடன் வாஷிங்டன் வந்திருந்த அவரது மனைவி அகி அபேவும், அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷலும்... உடன் மிஷல் அன்போடு வளர்த்து வரும் செல்லக் குட்டிகள் போ மற்றும் சன்னி.

இவ்வளவு திட்டம் இருக்கு பாஸ் என் கிட்ட!
இது அதிபர் ஒபாமா, ஜெர்மனியில் நடந்த ஜி7 மாநாட்டிற்காகப் போயிருந்தபோது எடுத்த படம். ஈஸியாக அவர் உட்கார்ந்திருக்க அவரிடம் சீரியஸாகப் பேசிக் கொண்டிருப்பது ஜெர்மன் சான்சலர் ஏஜெசலா மெர்க்கல்.

வெள்ளை நிறத்திலொரு வானவில்
விளக்கொளியில் பிரகாசிக்கும் வெள்ளை மாளிகை. ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக உரிமை உண்டு என்று அமெரிக்க சுப்ரீ்ம் கோர்ட் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து அதை இப்படி வரவேற்றது அமெரிக்க அரசு.

பணியிலிருந்து விலகி பனிக் கட்டியுடன்
பனி நிறைந்த அலாஸ்காவில் ஐஸ் கட்டிகளை சேகரிக்கும் அதிபர் ஒபாமா. 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அலாஸ்காவில் பனிக் கட்டிகள் உருகியுள்ளன.

மச்சி ஓபன் தி பாட்டில்!
இது சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ஒரு மகிழ்ச்சியான தருணம். கடந்த செப்டம்பரில் வெள்ளை மாளிகையில் நடந்த இரவு விருந்தின்போது இது.

இது அமெரிக்க இம்சை அரசன்!
இது ஹாலோவீன் கொண்டாட்டம். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸின் மகள் எல்லா ஹார்ப்பர் ரோட்ஸுடன் ஒபாமா. பேயைக் காணோமேன்னு மட்டும் தேடப்படாது.. அமெரிக்க ஜனாதிபதி எப்படி "இம்சை அரசன்" ரேஞ்சுக்கு ஜாலியாக இருக்கிறார் என்பதுதான் முக்கியம்.

அன்பு மகள்களே.. நன்றி சொல்வோம் வாருங்கள்
இது தேங்க்ஸ் கிவிங் நிகழ்ச்சியில் மகள் சாஷா மற்றும் மலியாவுடன்.

வாவ்..!
அதிபரும், மனைவி மிஷலும்... புதிய ஸ்டார் வார்ஸ் படத்தின் திரையீட்டு நாளின்போது இந்த பரிசு அவர்களுக்குக் கிடைத்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications