12 ஆண் குழந்தைகள் பெற்றெடுத்த அமெரிக்க தம்பதி- 13க்கு “வெயிட்டிங்”!
நியூயார்க்: அமெரிக்காவில் ஏற்கனவே 12 ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ள ஒரு தம்பதியினர் தற்போது 13வது குழந்தைக்காக காத்துள்ளனர்.
அமெரிக்காவில் மிச்சிகன் பகுதியை சேர்ந்தவர் ஜாய். இவரது மனைவி கதேரி சாச்வாண்ட். இவர்களுக்கு ஏற்கனவே 12 ஆண் குழந்தைகள் உள்ளன.

மூத்த மகன் பெயர் டைலர், அவனைத் தொடர்ந்து ஷாச், டிரோ, பிராண்டன், டாமி, வின்னி, கால்வின், கேபே, வெஸ்லி, சார்லி, லுகர், துகர் என்று வரிசையாக 12 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கதேரி மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் பிறக்க போகும் இக்குழந்தையும் ஆணாக இருக்க வேண்டும் என ஜாய் - கதேரி தம்பதி விரும்புகின்றனர்.
அக்குழந்தைக்கு பெயர் வைப்பது குறித்து தனது மகன்களுடன் ஆலோசித்து வருகின்றனர். இது குறித்து ஜாய்-கதேரி தம்பதி கூறும் போது, ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் அது ஆணா அல்லது பெண்ணா என பார்ப்பதில்லை. ஆனால் தற்போது பிறக்க இருக்கும் குழந்தை ஆணாக பிறக்க வேண்டும் என விரும்புகிறோம் என்றனர்.
கதேரி 14 குழந்தைகளுடன் பிறந்தவர். இவர் அக்குடும்பத்தில் 13 ஆவது குழந்தை ஆவார். எனவே, தனக்கு பிறக்க போகும் 13 ஆவது குழந்தையை ஆவலுடன் எதிர்பார்க்கிறார். அக்குழந்தை 13 ஆம் தேதி அன்று பிறக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications