Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடே பத்தி எரியுது.. ஆனால் அமெரிக்கா செஞ்ச வேலைய பாருங்க! முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: மேற்கு அமெரிக்காவின் ஒரு பாதி காட்டு தீயால் எரிந்துக்கொண்டிருக்கும் நிலையில், சர்வதேச நீதிமன்ற (ICC) நீதிபதிகளுக்கு தடை விதிக்கும் வகையில் முக்கிய தீர்மானத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியிருக்கிறது.

பாலஸ்தீன போரில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றம் செய்ததாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவரை கைது செய்யவும் உத்தரவிட்டிருந்தது. எனவே நெதன்யாகு வெளியில் தலைகாட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இவரை காப்பாற்றும் விதமாக தற்போது நீதிபதிகளுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறது.

us international court of justice israel gaza

அமெரிக்காவின் தீர்மானம்:

சர்வதேச நீதிமன்றத்தை அமெரிக்கா, 'கங்காரு நீதிமன்றம்' என்று அழைக்கிறது. அதாவது நியாயமாக செயல்படாமல், முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டதை தீர்ப்பாக வழங்கும் செயல்முறையை பின்பற்றும் நீதிமன்றங்கள் அமெரிக்காவில் கங்காரு நீதிமன்றம் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி நெதன்யாகுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது என்று அமெரிக்கா விமர்சித்து வந்தது.

இப்படி இருக்கையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நேற்று முக்கிய தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி, சர்வதேச நீதிமன்றமத்தின் அதிகாரத்தை அங்கீகரிக்காத அமெரிக்க குடிமகன் அல்லது, அமெரிக்காவின் நட்பு நாடுகளின் குடிமகனுக்கு எதிராக வழக்கு தொடர்பவர்களின் பொருளாதாரத்தை முடக்குவதற்கும், அவர்களுக்கான விசாவை மறுப்பதற்கும் அமெரிக்காவுக்கு உரிமை வழங்கப்படும்.

தீர்மானத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும்:

கடந்த மே மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் கரீம் கான், நெதன்யாகுவுக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தார். அவரையும், அவருக்கு உதவி செய்தவர்களையும் அமெரிக்காவுக்குள் அனுமதிக்காது என்பதே தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கூறுகிறது.

தீர்மானத்திற்கு ட்ரம்பின் குடியரசு கட்சியை கட்சியின் எம்பிக்கள் 198 பேரும் ஆதரவளித்தனர். ஆச்சரியம் என்னவெனில், பைடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்த 45 பேரும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்திருக்கிறார்கள் என்பதுதான். மொத்தம் 243 வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எதிராக 140 வாக்குகள் பதிவாகியுள்ளன.

நெதன்யாகு தப்பிப்பாரா?:

பாலஸ்தீனத்தில் ஏறக்குறைய 46,000 உயிர்களை கொன்று குவித்த இஸ்ரேல் ராணுவத்திற்கு தலைமை பொறுப்பு வகித்தவர்தான் இந்த நெதன்யாகு. தற்போது அமெரிக்கா இயற்றியுள்ள இந்த தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேல் சபை என அழைக்கப்படும் செனட்டுக்கு சென்று நிறைவேறும்பட்சத்தில் சட்டமாக உருவாகும். இந்த சட்டம் மூலம் நெதன்யாகு காப்பாற்றப்படுவார்.

சர்வதேச நீதிமன்ற சட்டத்தில் கையெழுத்து போடாத நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகள் இருக்கின்றன. இந்த நாட்டை தவிர மற்ற நாடுகளுக்குள் நுழைந்தால் அவர் கைது செய்யப்படுவார் என்றுதான் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இப்படி இருக்கையில் அமெரிக்காவின் புதிய சட்டம் மூலம் நெதன்யாகு எந்த நாட்டிற்குள் வேண்டுமானாலும் சிக்கல் இல்லாமல் நுழையலாம்.

அமெரிக்காவின் தற்போதைய நிலை:

கலிஃபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் என மேற்கு அமெரிக்காவின் ஒரு பாதி தற்போது காட்டு தீயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நேற்று வரை இந்த தீ சுமார் ரூ.4.3 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதார சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. தீ வேகமாக பரவி வருவதால் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த பேரழிவை தடுக்க போதிய முயற்சி எடுக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இப்படி இருக்கையில் நெதன்யாகுவுக்க ஆதரவான தீர்மானம் அவசியமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+