Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைவிட்ட ரஷ்யா! வெனிசுலாவிற்கு வந்த திடீர் வாழ்வு..கையேந்தும் "பகையாளி" அமெரிக்கா.. செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது, சர்வதேச அளவில் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு நேரடியாக தடை விதிக்கப்படலாம் என்ற நிலை உள்ளதால் அமெரிக்கா வேறு எண்ணெய் நிறுவனங்களை சார்ந்து நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.. அதிலும் பல நாள் பகையாளியிடம் கையேந்தும் நிலைக்கு மேற்கு உலகம் சென்றுள்ளது.

Recommended Video

    Venezuela, Saudi Arabia, UAE நாடுகளை கெஞ்சும் America | Oneindia Tamil

    ரஷ்யா மீது மேற்கு உலக நாடுகளும் ஐரோப்பாவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. ஏற்கனவே ரஷ்யா ஸ்விப்ட் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. இதனால் சர்வதேச அளவில் பணப்பரிவர்த்தனை செய்வதில் இருந்து ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இன்னொரு பக்கம் ரஷ்யாவின் ஏற்றுமதிக்கு பல்வேறு விதமான தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இது ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதியை நேரடியாக தடை செய்யவில்லை என்றாலும் மறைமுக தடையாக பார்க்கப்படுகிறது. அதோடு விரைவில் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு நேரடியாக முழு தடை விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஷ்யாவின் எண்ணெய்

    ரஷ்யாவின் எண்ணெய்

    இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவின் எண்ணெயைத்தான் அதிகம் நம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. பல நாடுகள் ரஷ்யாவின் எண்ணெயை நம்பி உள்ள நிலையில் தற்போது உலகம் முழுக்க கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே போர் காரணமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறைந்துள்ளது. 1 பேரல் கச்சா எண்ணெய் உலகம் முழுக்க சராசரியாக 128 டாலரை நெருங்கி உள்ளது. 2008க்கு பின் ஏற்பட்ட மிக அதிக கச்சா எண்ணெய் விலை உயர்வு இதுதான். கொரோனா காலத்தில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் பூஜ்யத்திற்கும் கீழே சென்றது குறிப்பிடத்தக்கது.

    ஒரு நாடு தேவை

    ஒரு நாடு தேவை

    நிலைமை இப்படி இருக்க ரஷ்யாவிற்கு மாற்றாக ஒரு நாட்டை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கு உலகம் இருக்கிறது. ரஷ்யாவிற்கு இணையாக கச்சா எண்ணெய் வழங்க கூடிய நாட்டை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அமீரகம், சவுதி போன்ற மத்திய கிழக்கு நாடுகள் பல எண்ணெய் உற்பத்தியை குறைத்து கொண்டுவிட்டன. அங்கே மேலும் எண்ணெய் எடுக்க வாய்ப்பு குறைவு என்பதால் ரஷ்யா பகையாளி வீட்டு வாசலுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது... அந்த பகையாளி வெனிசுலா!

    தடை

    தடை

    ஆம் அமெரிக்கா தேடி தேடி இருக்கின்ற பொருளாதார தடைகளை எல்லாம் விதித்ததே .. அதே வெனிசுலாவிடம்தான் அமெரிக்கா கிட்டத்தட்ட கையேந்தும் நிலையில் உள்ளது. வெனிசுலா பிரச்சனை பற்றி சுருக்கமாக பார்த்து விடலாம். வெனிசுலா ஒரு சோசலிஸ்ட்.. கம்யூனிஸ்ட் கொள்கை கொண்ட நாடு. அங்கு முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேஸ் பற்றி எல்லோரும் கேள்வி பட்டு இருப்பீர்கள். அவரின் ஆட்சிக்கு கீழ் வெனிசுலா நன்றாகவே இருந்தது.

    வெனிசுலா

    வெனிசுலா

    அவரின் ஆட்சியின் இறுதியில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் 2013ல் புதிய அதிபர் நிகோலஸ் மதுரோ ஆட்சிக்கு வந்த பின் தீவிரம் அடைந்தது. பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தது. எண்ணெயை நம்பி இருக்கும் வெனிசுலா மொத்தமாக கடும் வறுமையை நோக்கி சென்றது. எண்ணெய் கிணறுகளை சரியாக பராமரிக்காமல் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. உலகில் அதிக தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் கொண்ட நாடு வெனிசுலாதான்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    அப்படி இருந்தும் அந்த நாடு கடும் வறுமையில் மூழ்கியது. இதோடு இன்னொரு பக்கம் நாட்டில் அபின், ஹெராயின் போன்ற போதை பொருட்கள் அதிகரித்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. வெனிசுலா அதிபர் மதுரோவிற்கு நெருக்கமாக ஆனவர்கள் இப்படி செய்ததாக புகார் வைக்கப்பட்டது. இதெல்லாம் போக அங்கு ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து 2017ல் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு மதுரோ ராணுவத்தின் கட்டுப்பாட்டோடு ஆட்சியை பிடித்தார்.

    வெனிசுலா அமெரிக்கா

    வெனிசுலா அமெரிக்கா

    அதன்பின் உலக நாடுகள் கண்டனத்தால் மீண்டும் அதே வருடம் தேர்தல் நடக்க அதில் மதுரோ வென்றாலும், தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகார் வைக்கப்பட்டது. இதனால் மதுரோ மீது தனிப்பட்ட வகையிலும் வெனிசுலா மீதும் பல பொருளாதார தடைகள் உள்ளன. வெனிசுலா இது உலக நாடுகள் பல கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா கண்டம் மொத்தம், கனடா, மெக்சிகோ, பணமா, ஸ்விஸ் என்று பல நாடுகள் தனி தனியாக பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

    கச்சா எண்ணெய்

    கச்சா எண்ணெய்

    இதில் ஒரு தடைதான் வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்பது. இதனால் வெனிசுலா பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்பதால் எந்த நாடும் அவர்களிடம் எண்ணெய் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இப்படி இருக்க தற்போது கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் வெனிசுலா மீதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடையை நீக்க அமெரிக்கா ஆலோசனை செய்து வருகிறது.

     மதுரோ ஆட்சி

    மதுரோ ஆட்சி

    வெனிசுலாவில் மதுரோ அரசை இன்னும் அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. அதோடு மதுரோ ரஷ்யாவின் ஆதரவாளர். ஆனாலும் அவர்கள் மீது பொருளாதார தடைகள் நீக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் சரியாகும். இதை காரணம் காட்டி வெனிசுலா அதிபர் மதுரோ அமெரிக்காவுடன் சமாதானமாகி போவார் என்று கூறப்படுகிறது. இதற்கான முதல் கட்ட கூட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா அனுமதி அளிக்கலாம்.

    நீண்ட தூரம் இல்லை

    நீண்ட தூரம் இல்லை

    அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. என்ன ஒரே கண்டிஷன் வெனிசுலாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களை அமெரிக்க நிறுவனங்கள் இயக்கும். வருமானத்தில் லாபத்தை வெனிசுலா அரசுக்கு அளிக்கும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான டீலிங் முடியும் என்கிறார்கள். கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவுடனான மோதலால் ரஷ்யாவின் நண்பனிடம் கையேந்தும் நிலைக்கு மேற்கு உலக நாடுகள் சென்றுள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+