For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல்: முந்தும் ட்ரம்ப்... ஜோ பிடனுக்கு நோ சான்ஸ் - எண் கணித நிபுணர் கணிப்பு

அமெரிக்கவை மீண்டும் கைப்பற்றி அரியணையை தக்க வைப்பாரா ட்ரம்ப், தேர்தலில் வென்று ட்ரம்பை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றுவாரா? ஜோ பிடன் என்ற எதிர்ப்பு எழுந்துள்ளது. யாருக்கு வெற்றி வாய்ப்பு என்று கணித்

Google Oneindia Tamil News

சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை செவ்வாய்கிழமை நடைபெற உள்ளது. அதிபர் ட்ரம்ப், அவரை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடன் கடைசி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கருத்து கணிப்புகளில் முந்தியுள்ளார் ஜோ பிடன். அமெரிக்காவை பொறுத்தவரை கருத்து கணிப்புகள் பொய்யாகியுள்ளன. அமெரிக்காவை யார் கைப்பற்றுவார்கள் என்று எண் கணித ஜோதிட முறையில் கணித்து கூறியுள்ளார் நிபுணர் டாக்டர் ஜெஎன்எஸ் செல்வன்.

அமெரிக்காவில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் எந்த தேதியில் வாக்குப் பதிவு நடைபெறும்? எந்த தேதியில் புதிய அதிபர் பதவியேற்பார் என்பதும் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறும். அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம்தேதி புதிய அதிபர் பதவியேற்பார்.

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோபிடன் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் கமலா ஹாரிஸ். குடியரசு கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக மீண்டும் களம் காண்கிறார் மைக் பென்ஸ்.

ஜோ பிடன் சாதிப்பாரா?

ஜோ பிடன் சாதிப்பாரா?

ஜோ பிடன் பிறந்த நாள் 20 -11 - 1942 இதன் கூட்டுத்தொகை 2 வருகிறது. பிடனுக்கு தற்போது 77 வயதாகிறது. பெயர் எண் கூட்டுத்தொகை 9ல் வருகிறது. இரண்டாம் எண் ஆதிக்கம் கொண்டவர் ஜோ பிடனுக்கு ஆகாத பெயர் எண்ணாக 9 வருவது பின்னடைவுதான். ஜோ பிடன் 50 ஆண்டுகாலம் அரசியல் அனுபவம் கொண்டவர். இவர் ஒபாமா காலத்தில் துணை ஜனாதிபதியாக இருந்திருக்கிறார். ஜோ பிடன் கையெழுத்தில் புள்ளி வைத்து போடுகிறார். இது அவரது முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது.

நல்லவர் வல்லவர் ஆவாரா?

நல்லவர் வல்லவர் ஆவாரா?

ஜோ பிடனுக்கு வரும் வாய்ப்புகள் எல்லாம் வெற்றி கிடைக்காமல் தட்டி போய்விடுகிறது. பிடன் நல்ல மனதுடையவர். அரவணைத்து செல்பவர், இளகிய மனம் கொண்டவர். பிடிவாத குணத்தினால் பலரது வெறுப்பை சம்பாதித்து கொள்கிறார். சமுதாய கேடுகளை ஏற்படுத்துபவரை அழிக்க நினைப்பவர். சுறுசுறுப்பானவர். இவருக்கு பின்னடைவு என்பது இவரது செயல்களால் நடைபெறுகிறது. இறை நம்பிக்கை அதிகம் கொண்டவர் பிடன். ரொம்ப நல்லவரான ஜோ பிடன் வல்லவர் ஆக சாதிக்கக் கூடிய திறமை குறைவாகவே இருக்கிறது.

நவம்பர் 3 தேர்தல் நாள் எப்படி

நவம்பர் 3 தேர்தல் நாள் எப்படி

ஜோ பிடன் இரண்டாம் எண் தாக்கம் வந்த காலத்தில் இவர் வெற்றி பெற்றிருக்கிறார். ஒன்பதாம் எண் ஆதிக்கம் வந்த போது இவர் பின்னடைவுகளையே சம்பாதித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் நாள் நவம்பர் 03, 2020. 03-11-2020 கூட்டுத்தொகை 9 வருகிறது. இதுவும் பிடனுக்கு பின்னடைவை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

ட்ரம்ப் சாதிப்பாரா?

ட்ரம்ப் சாதிப்பாரா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனாவை பற்றி எல்லாம் கவலைப்படாமல் பேரணி நடத்தி பிரச்சாரம் செய்துள்ளார். பல ஆயிரம் பேர் அவரால் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. ட்ரம்ப் பிறந்த தேதி 14-06-1946 பிறந்த எண் கூட்டுத்தொகை 4 வருகிறது. டொனால்ட் ட்ரம்ப் பெயர் எண் கூட்டுத்தொகை 3 வருகிறது. குடியரசுக்கட்சியின் எண் கூட்டுத்தொகை 9 வருகிறது.

பிடனுக்கு பாதகமான எண்

பிடனுக்கு பாதகமான எண்

அமெரிக்க அதிபர் தேர்தல் நாள் 03-11-2020 இதன் கூட்டுதொகை 9 வருகிறது. இந்த எண்கள் அதிபர் ட்ரம்ப்புக்கு சாதகமாக இருக்கிறது. 3ஆம் எண்ணில் பிறந்து பெயர் எண் கூட்டுத்தொகை 3 கொண்ட ட்ரம்புக்கு 9ஆம் எண் சாதகமான எண். இந்த எண் கூட்டுதொகை நாளில் தேர்தல் நடைபெறுகிறது. அதே நேரத்தில் ஜோ பிடனுக்கு ஒத்து வராத எண் 9 அந்த எண் கூட்டுதொகை வரும் நாளில் தேர்தல் நடைபெறுவது ஜோ பிடனுக்கு பாதகமாகவே இருக்கிறது என்பது எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வனின் கணிப்பாகும். இவரது கணிப்பு பலிக்குமா பார்க்கலாம்.

English summary
The US presidential election is scheduled for Tuesday. President Trump and his rival, Joe Biden, were involved in the last phase of the campaign. Joe Biden leads in polls Polls for the United States are false. Expert Dr. JNS Chelvan predicts who will conquer the United States in Numorology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X