அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சியில் டிரம்புக்கு போட்டி..களம் இறங்கும் மைக் பென்ஸ்..யார் இவர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே போட்டியிட இருப்பதாக அறிவித்து இருக்கும் நிலையில், தற்போது மைக் பென்சும் கோதாவில் இறங்கியுள்ளார்.
அமெரிக்காவில் வரும் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை இரு கட்சி ஆட்சி முறையை கொண்ட நாடு ஆகும். அங்கு ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரு கட்சிகள் மட்டுமே போட்டியிடும். தற்போது அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிபராக ஜோ பைடன் உள்ளார்.

ஜோ பைடனின் பதவிக்காலம் முடியவுள்ளதால் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அமெரிக்காவை பொருத்தவரை அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும்.
அந்த வகையில், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் பலரும் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலரும் தற்போதே கோதாவில் இறங்கி வருகின்றனர். அந்த வகையில், அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் தானும் போட்டியிட இருப்பதாக கூறியிருக்கும் நிலையில் மைக் பென்சும் அறிவித்து உள்ளது கவனிக்கத்தக்கது.

குடியரசுக் கட்சியின் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவராக அறியப்படும் மைக் துணை ஜனாதிபதியாகவும் பதவி வகித்து இருக்கிறார். முன்னதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேவும் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறியிருக்கும் நிலையில், தற்போது மைக் பென்சும் அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications