உற்றுநோக்கும் உலகம்.. டிரம்புக்கு வாழ்த்து தெரிவிக்கும் விளாடிமிர் புதின்? ரஷ்யா சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நல்ல உறவு என்பது இல்லை. உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

அமெரிக்காவில் அதிபர் என்பவர் எலக்ட்ரோலல் காலேஜ் ஓட்டுகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். 50 மாகாணங்களில் 538 எலக்ட்ரோலல் காலேஜ் ஓட்டுகள் உள்ளன. இந்த எலக்ட்ரோலல் காலேஜ் ஓட்டுகள் என்பது மாகாணங்களின் மக்கள்தொகையை பொறுத்து மாறுபடும்.

us presidential election 2024 donald trump kamala harris 2024

மொத்தமுள்ள 538 எலக்ட்ரோலல் ஓட்டுகளில் 270 எலக்ட்ரோலல் ஓட்டுகள் பெறுவோர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அதன்படி இன்றைய ஓட்டு எண்ணிக்கையின்போது குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 277 எலக்ட்ரோலல் ஓட்டுகளை பெற்றிருந்தார். கமலா ஹாரிஸ் வெறும் 224 எலக்ட்ரோலல் ஓட்டுகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்புக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவிப்பாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது:

நம்முடைய அரசுக்கு எதிராக நேரடியாகவும், மறைவுகமாகவும் போரில் ஈடுபட்டுள்ள நட்புறவு இல்லாத நாட்டை பற்றி பற்றி கேட்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. அவருக்கு வாழ்த்து தெரிவிக்காவிட்டாலும் எந்த பிரச்சனையும் வராறு. ஏனென்றால் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இருநாடுகளின் உறவும் மோசமாக உள்ளது. தற்போது புதின் வாழ்த்து சொல்லும் மனநிலையில் இல்லை.

அடுத்து என்ன நடக்கும் என்பது அமெரிக்காவின் அடுத்த தலைமையை பொறுத்தது. நியாயம், சமத்துவம் மற்றும் பரஸ்பர கவலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைக்கு ஏற்கனவே புதின் அழைப்பு விடுத்து இருந்தார். இப்போது அமெரிக்கா நமக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது. அடுத்த ஜனவரியில் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்'' என்றார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி செய்து வருகிறது. மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி விளாடிமிர் புதினுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது. இதற்கு ரஷ்யாவும் பதிலடி கொடுக்கிறது. இதனால் இருநாடுகள் இடையேயான உறவு மோசமாக உள்ளதோடு இரு வல்லரசுகளும் பரம எதிரியாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+