அமெரிக்க விதித்துள்ள தடை ஒரு முழு அளவிலான வணிகப் போருக்கு சமம்: ரஷ்யா
ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய தடை உத்தரவுகள், ரஷ்யாவுக்கு எதிரான ஒரு முழு அளவிலான வணிகப் போர் தொடுப்பதற்கு சமமானது என்று அந்நாட்டு பிரதமர் டிமிட்ரி மட்வியேடெஃப் கூறியுள்ளார்.
அதிபர் டொனால்ட் டிரம்பால் கையெழுத்திடப்பட்ட தடை உத்தரவுகள் அமெரிக்க அதிபராக அவருடைய முழுமையான ஆற்றலற்ற தன்மையை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு எதிராகவும், யுக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை தண்டிக்கும் நோக்கிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சட்ட மசோதாவில் அமெரிக்க நாடாளுமன்றம் அளவு கடந்து செயல்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்றைய தினம் (புதன்கிழமை) தடை சட்டங்கள் ஊடாக அமெரிக்காவின் எதிரிகளுக்கு பதிலடி தரும் இச்சட்டத்தில் கையெழுத்திட்ட டிரம்ப், ரஷ்யாவுக்கு எதிரான இந்நடவடிக்கையில் ஆழமான குறைபாடு இருப்பதாக கூறியுள்ளார்.
- 755 அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற ரஷ்ய அதிபர் ஆணை
- ரஷ்யாவை தண்டிக்க புதிய சட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு கட்சிகளும் ஒப்புதல்
ரஷ்யா மட்டுமின்றி இரான் மற்றும் வட கொரியா மீதும் தடை சட்டத்தின் காரணமாக பொருளாதார தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இரானுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய தடை உத்தரவு, இரு நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகவும், அமெரிக்காவுக்கு பொருத்தமான மற்றும் ஏற்புடைய முறையில் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்னா செய்தி முகமை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா பிறப்பித்துள்ள தடை குறித்து வட கொரியா இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
பிபிசியின் பிற செய்திகள்:
- இரவோடு இரவாக மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை
- ஒரே குடும்பத்தில் சிலர் இந்தியர், சிலர் பாகிஸ்தானியர் - இது எப்படி?
- டெல்லியில் தமிழக விவசாயிகளின் பசியைப் போக்கும் சீக்கியர்கள்
- இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது எப்படி? (காணொளி)
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது













Click it and Unblock the Notifications