நெருங்கும் கெடு.. ஒரே நாளில் காபூலில் இருந்து 19 ஆயிரம் பேர் வெளியேற்றம்.. ஆப்கனில் தொடரும் பதட்டம்
காபூலில் இருந்து 19 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்
காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் இருந்து ஒரே நாளில் 19 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது,
Recommended Video
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறத் துவங்கியதை அடுத்து, அங்கு ஒவ்வொரு பகுதியாக தன்வசப்படுத்திய தலிபான்கள், ஆப்கன் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றினர்.
இப்போது, ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள ஏர்போர்ட்டில் மட்டுமே அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன... அங்கிருந்து கொண்டே, அமெரிக்கர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

ஒப்பந்தம்
மேலும், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தங்கள் படைகள் முழுவதையும் திரும்பப்பெற்றுவிட வேண்டும் என்று தலிபான்கள் கெடு விதித்துள்ளனர்.. இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.. ஆனால், இந்த குறுகிய நாட்களுக்குள் அனைவரையும் வெளியேற்றுவது சாத்தியமா என்பது தெரியவில்லை.

அறிக்கை
இதனிடையே அதிபர் ஜோ பிடன் பேசும்போது, "ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றும் பணியில் இறுதிகட்டத்தில் இருக்கிறோம்.. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வெளியேறுவது என்பது தலிபான்களின் ஒத்துழைப்பு மற்றும் ஏர்போர்ட்டை பயன்படுத்த அனுமதிப்பது, நமது நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை பொறுத்தே அமையும்.

தாலிபான்
தலிபான்களுடனான நமது அணுகுமுறையை ஜி7 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஐநா சபை ஆகியவை ஏற்றுக்கொண்டுள்ளன. தலிபான்களின் நடவடிக்கைகளை பொறுத்து அவர்களை மதிப்பிடுவோம் என்று கூறியுள்ளார்.. அதாவது தங்கள் பக்கம் அனைத்து விவகாரங்களிலும் சரியாகவே உள்ளோம் என்பதை அடிக்கடி பிடன் தன் பேச்சில் மறக்காமல் உணர்த்தியே வருகிறார்.

மீட்பு பணிகள்
இந்நிலையில், எத்தனை நபர்களை வெளியேற்றினோம் என்பது குறித்து ஆளுநர் மாளிகை அறிக்கையாக அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.. அதன்படி, இன்றும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.. அதில், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து இடைவிடாமல் மீட்பு பணிகள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் 19 ஆயிரம் பேர் ஒரே நாளில் வெளியேற்றியதாக கூறியுள்ளது.

தகவல்
அதாவது, 42 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 11 ஆயிரத்து 200 பேர் வெளியேறியதாகவும், கூட்டணி நாடுகளை சேர்ந்த 4 ஆயிரத்து 800 விமானங்கள் மூலம் 7 ஆயிரத்து 800 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது.. இதையடுத்து தொடர்ந்து வெளியேறும் பணியில் அமெரிக்க வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications