ஈராக் விரைந்தது அமெரிக்கபடை: ஐநா ஊழியர்கள் வெளியேற்றம்
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தை சதாம் ஆதரவு படைகள் கைப்பற்றிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக, ஐநா மற்றும் அமெரிக்கா அதிகாரிகள் பாக்தாத்தில் இருந்து அவசரமாக வெளியேற்றப்படுகிறார்கள். அமெரிக்கா தனது நாட்டு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க படைவீரர்களை ஈராக்கிற்கு அனுப்பியுள்ளது.
'ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய நாடு (ஐஎஸ்ஐஎஸ்)' என்ற பெயரிலான சன்னி பிரிவு தீவிரவாத அமைப்பு, ஈராக்கில் திடீர் எழுச்சி பெற்று முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துகொண்டுள்ளது. தலைநகர் பாக்தாத் விரைவில் வீழும் சூழ்நிலை எழுந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு ஐநா சபையில் இருந்து ஈராக்கில் பணியாள்ளி வந்த, 60 அதிகாரிகள் உடனடியாக அண்டை நாடான ஜோர்டானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல அமெரிக்காவும், பாக்தாத்திலுள்ள தனது தூதரக அதிகாரிகளை தற்காலிகமாக அந்த நாட்டின் எர்பில், பாஸ்ரா அல்லது ஜோர்டான் தலைநகர் அம்மான் ஆகியவற்றில் எங்காவது தஞ்சம் புகுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தனது நாட்டு அதிகாரிகளை பாதுகாக்க 250 பாதுகாப்பு வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகம்தான் உலகிலேயே மிகப்பெரிய தூதரகமாகும். இங்கு 5ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள்.
சதாம் ஆதரவு படைகளுடன் சண்டையிட அமெரிக்கா தனது படைகளை அனுப்ப போவதில்லை என்று அந்த நாட்டு அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அதே நேரம் வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டமிட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications